logo

|

Home >

hindu-hub >

temples

திருவலிதாயம் பாடி வல்லீஸ்வரர் ஸ்தலபுராணம் (சென்னை)

இறைவர் திருப்பெயர்: வல்லீஸ்வரர், வலிதாயநாதர்.

இறைவியார் திருப்பெயர்: ஜகதாம்பாள், தாயம்மை.

தல மரம்:

தீர்த்தம் : பரத்வாஜ தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், பரத்வாஜர், இராமர், ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன், இந்திரன், வலியன் (கருங்குருவி) முதலானோர்.

Sthala Puranam

Tiruvalitayam temple
திருவலிதாயம் வல்லீஸ்வரர் திருக்கோயில் 
  • தற்போது சென்னைக்கு அருகில் உள்ள 'பாடி' என்னும் இடமே 'திருவலிதாயம்' என்னும் தலம் ஆகும்.
  • பரத்வாஜர், இராமர், ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன், இந்திரன், வலியன் (கருங்குருவி) முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்றத் தலம்.
  • பரத்வாஜ முனிவர், வலியனாக (கருங்குருவியாக) சாபம் பெற்றார்; அச்சாபம் நீங்க இத்தலத்து வந்து தீர்த்தம் உண்டாக்கி, இறைவனைப் பூசித்துச் சாபம் நீங்கப் பெற்றார் என்பது தல வரலாறு.
  • பிரம்மாவுக்கு கமலை, வல்லி என இரு பெண்கள் தோன்றினர் என்றும் அவர்களை விநாயகர் மணந்து கொண்டார் என்றும் வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது.
  • தேவகுரு பிரஹஸ்பதி தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். தன்னைப் பற்றி இருந்த தோஷம் நீங்க மார்க்கண்டேயரின் ஆலோசனைப்படி இத்தலத்தில் தவமிருந்து சிவனருள் பெற்றார்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்   -   1. பத்தரோடுபலரும் (1.003); பாடல்கள்      :   சேக்கிழார்  -       திருவேற்காடு அமர்ந்த (12.28.1030) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • கஜப்பிருஷ்ட விமான அமைப்புடைய அழகான கோயில். 
  • மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம்.
  • இத்தலத்தில் பௌர்ணமி விசேஷமாக சொல்லப்படுகிறது.
  • திருமுறை தலமட்டுமின்றி, அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலும் உள்ளது.
  • தீர்த்த கிணறில் உள்ள நீர் இளநீரைப்போன்று அருமையான சுவையுடையதாக விளங்குகிறது.
  • பிரகாரத்தில் விநாயகர் சந்நிதியிடத்தில் சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. அதற்குப் பக்கத்தில்தான் விநாயகர் சந்நிதி உள்ளது. அதுபோலவே சுப்பிரமணியர் சந்நிதியும் உரிய இடத்தில் இல்லாமல் சற்று முன்பாகவே அதாவது கருவறையின் நேர் பின்புறத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. சந்நிதியில் சுப்பிரமணியருக்கு முன்னால் சிவலிங்கத் திருமேனி உள்ளது.
  • அறுபத்து மூவர் சந்நிதியில் முழுவதுமில்லை; சில திருமேனிகளே உள்ளன.
  • பரத்வாஜர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.
  • மூலவர் சிவலிங்கத் திருமேனி கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
  • சித்திரையில் பிரம்மோத்சவம்.
  • இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுக்கள் 14 உள்ளன. அவற்றில் சுவாமி பெயர் திருவலிதாயமுடைய நாயனார் என வழங்கப் பெறுகிறது. அம்மை பெயர் திருவீதி நாச்சியார் என்பது(-217 of 1910). இன்ன அரசர் காலத்தது என்று அறியப் பெறாத கல்வெட்டு ஒன்று, திருவெண்காட்டிலிருந்து அழகிய திருச்சிற்றம்பலமுடைய நாயனாரை எழுந்தருள்வித்துப் பிரதிஷ்டை செய்து, அதனைப் பூசிக்க, அந்தணரையும் அங்கிருந்து குடியேற்றி, அவர்களுக்கும் உணவுக்காக ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க்கோட்டமான சங்கமசோழவள நாட்டு அம்பத்தூர் நாட்டு திருவலிதாயத்தில் நிலம் விட்டதாகக் கூறுகிறது(-214 of 1910). திருஞான சம்பந்த நாழி என்னும் மரக்காலால் நெல் அளந்து கொடுக்கும்படியும் எழுதியுள்ளது. திரிபுவன சக்ரவர்த்தியான இராஜராஜசோழன் தமது ஆட்சி 28ஆம் ஆண்டில் க்ஷேத்ரபாலப் பிள்ளையார் கோயிலையும் கட்டி, நிவேதனத்திற்காக நிலமும் விட்டான்(-216 of 1910). விஜயகண்ட கோபால தேவர் என்பவர் காஞ்சிபுரத்திலிருந்து நடனமாதரைக் கொண்டுவந்து குடியேற்றினார். சுவாமிக்கும் அம்மை திருவீதி நாச்சியாருக்கும் ஆபரணங்களும், பாத்திரங்களும் வழங்கினார்(-217 of 1910).
  • இராஜராஜன் காலத்தில் சாளுக்கிய நாரணன் யாதவராயன் என்பவனால் பாடியைச் சேர்ந்த சிந்தாமணிபுரம் என்னும் இடத்தில் இருவீடுகளும் இரு நந்தவனங்களும் வழங்கப் பெற்றன. பரமேஸ்வரமங்கலத்துச் சிலம்பூர் கோட்டத்துச் சிலம்பணிந்தான் மாதவராயனால் விளக்கிற்குப் பொன் வழங்கப்பெற்ற செய்தியும் அறியலாகும்.(-218 , 219 of 1910) இவையன்றி, விளக்கு, உணவு முதலியவற்றிற்கு நிலமும் காசும் அளித்ததாக ஏனைய கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னை ஆவடிச்சாலையில் 'பாடி' உள்ளது. 'டி.வி.எஸ், லூகாஸ்' நிறுத்தத்தில் இறங்கி எதிரில் போகும் சாலையில் சென்றால், ஊர் நடுவே கோயில் உள்ளது. தொடர்பு : 044 - 26540706

Related Content

திருஆப்பாடி (திருவாய்ப்பாடி)

திருமழபாடி

திருநெல்வாயில் அரத்துறை தலவரலாறு

திருநாவலூர் தலவரலாறு

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடைநாயகி திருக்கோயில் தல