logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கச்சிநெறிக்காரைக்காடு (திருக்காலிமேடு) காஞ்சிபுரத்திலுள்ள கோயில்

இறைவர் திருப்பெயர்: சத்தியவிரதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: (இத்தலத்திற்குரிய உற்சவ அம்பாளாக) பிரமராம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : இந்திர தீர்த்தம்.

வழிபட்டோர்:இந்திரன், புதன், சம்பந்தர், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

kaccinerikkaraikkadu temple
கச்சி நெறிக்காரைக்காடு சத்யவிரதேஸ்வரர் திருக்கோயில் 
  • ஒரு காலத்தில் இப்பகுதியே காஞ்சிக்கு வரும் வழியாக அமைந்திருந்ததாலும், இப்பகுதி காரை(முட்) செடிகள் நிரம்பியிருந்ததாலும் கச்சிநெறிக், "காரைக்காடு" என்று பெயர் பெற்றது.
  • இந்திரன் வழிபட்டதால் இப்பகுதிக்கு இந்திரபுரி என்றும் பெயர் வழங்குகிறது.
  • சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்த புதன் இங்கு வந்து வழிபட்டுக் கிரக நிலையைப் பெற்றான். இதன் காரணமாகவே புதன்கிழமையில் இத்தலத்தில் நீராடி வழிபடுதல் சிறப்புடையதாக சொல்லப்படுகிறது.
  • இறைவன் - சத்தியவிரதேஸ்வரர்; இப்பெயரையொட்டியே காஞ்சிக்கு 'சத்தியவிரதக்ஷேத்திரம்' என்ற பெயருண்டாயிற்று.
  • இப்பகுதியில் வேப்பமரங்கள் அடர்ந்திருந்தமையால் இங்குள்ள தீர்த்தம் மக்களால் வேப்பங்குளம் என்றழைக்கப்படுகிறது. இப்பெயரில் உள்ள பெரிய வேப்பங்குளம் என்பதே பண்டைய இந்திர தீர்த்தமாகும்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர்   - 1. வாரணவு முலைமங்கை (3.65); பாடல்கள்  : சேக்கிழார்  -   நீடு திருப் பொலிகாஞ்சி (12.28.1000) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம். 

Specialities

  • இக்கோயில் ஊருக்குச் சற்றுத் தள்ளி 'திருக்காலிமேடு' என்ற பகுதில் உள்ளது.
  • மூலவர் சுயம்பு மூர்த்தி; சற்று உயர்ந்த பாணம் - லேசான செம்மண் நிறத்தில் காட்சியளிக்கிறது.
  • தக்ஷிணாமூர்த்தி திருமுன்பு 7 சீடர்கள் உள்ளனர்.
  • இக்கோயில் (சம்பந்தர்) பாடல் பெற்ற தலமாகும்.
  • மூன்று நிலை ராஜகோபுரம்.
  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இரயில்வே ரோடில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்திற்கு எதிரில் திருக்காலிமேட்டிற்குச் செல்லும் பாதையில் சென்று இக்கோயிலை அடையலாம். பேருந்து வசதி உள்ளது. தொடர்பு : 044 - 27232327, 27221664

Related Content

திருக்கச்சியேகம்பம் தல புராணம் (காஞ்சிபுரம்)

திருக்கச்சிமேற்றளி (திருமேற்றளீஸ்வரர் கோயில், பிள்ளையார்பாள

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

திருக்கச்சிஅனேகதங்காவதம் (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்

திருமாற்பேறு தலவரலாறு (திருமால்பூர்)