logo

|

Home >

hindu-hub >

temples

வைகல்மாடக்கோயில்

இறைவர் திருப்பெயர்: சண்பகாரண்யேஸ்வரர், வைகல்நாதர்.

இறைவியார் திருப்பெயர்: சாகாகோமளவல்லி, கொம்பியல் கோதை, வைகலாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : சண்பகத் தீர்த்தம்

வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சேக்கிழார், இலக்குமி.

Sthala Puranam

 

Vaikal Madakkoyil

ஊர் - வைகல்; கோயில் - மாடக்கோயில்.

 

  • இக்கோயிலில் இலக்கு வழிபட்டு பேறு பெற்றாள்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் :  சம்பந்தர்  - 1. துளமதி யுடைமறி தோன்று(3.18); 

பாடல்கள்     :    அப்பர்     -      துப்பினைமுன் (6.27.5 & 10), மாதினையோர் கூறுகந்தாய் (6.61.1), புலிவலம் புத்தூர் (6.70.11);                    

சேக்கிழார்  -      கொன்றைவார் (12.28.432 & 433) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

இத்தலத்தில் மூன்று கோயில்கள் உள்ளன:- 1. விசுவநாதர் ஆலயம் - 'வளநகர் ' என்று இப்பகுதி வழங்குகிறது - திருமால் வழிபட்டது, 2. பிரமபுரீசுவரர் ஆலயம் - தற்போது சிறப்பாக உள்ள கோயில் - பிரமன் வழிபட்டது, 3. வைகல்நாதர் ஆலயம் - இதுவே மாடக்கோயில்; பாடல் பெற்றது.

 

  • சண்பகாரண்யம், நித்யவாசபுரம் முதலயன இத்தலத்தின் வேறு பெயர்கள்.

 

  • மூலவர் - சுயம்பு மூர்த்தி; அழகான பாணம்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - காரைக்கால் செல்லும் பாதையில் திருநீலக்குடி தாண்டி, பழியஞ்சியநல்லூர் கூட்ரோடு என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் 'நாட்டார் வாய்க்கா 'லைக் கடந்து, பழியஞ்சியநல்லூரை அடைந்து, மேலும் 2 கி. மீ. அதே சாலையில் சென்றால் வைகலை அடையலாம். (நாட்டார் வாய்க்கால் மீது உள்ள பாலம் குறுகலானது; ஆதலின் பேருந்து செல்லாது.) தொடர்புக்கு :- 0435 - 246 5616.

Related Content