logo

|

Home >

devotees >

references-to-pugazthunai-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் புகழ்த்துணை நாயனார் பற்றிய குறிப்புகள்

 

திருஞானசம்பந்தர் தேவாரம்

நிலந்த ணீரோ டனல்கால் விசும்பின் நீர்மையான் 

சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தானூர் 

அலந்த அடியான் அற்றைக் கன்றோர் காசெய்திப்

புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.                      2.63.07 

 

சுந்தரர் தேவாரம்

 

அகத்தடி மைசெய்யும் அந்தணன் றான்அரி

        சிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்

மிகத்தளர் வெய்திக் குடத்தையும் நும்முடி

        மேல்விழுத் திட்டு நடுங்குதலும்

வகுத்தவ னுக்குநித் தற்படி யும்வரு

        மென்றொரு காசினை நின்றநன்றிப்

புகழ்த்துணை கைப்புகச் செய்துகந் தீர்பொழி

        லார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.                   7.09.06

 

கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்

        காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை

        மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்

புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி

        பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்

அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.            7.39.9 

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையம் சிறுவிலைத்தா

உருவலி கெட்டுண வின்றி உமைகோனை மஞ்சனம்செய்

தருவதோர் போதுகை சோர்ந்து கலசம் விழத்தரியா

தருவரை வில்லி அருளும் நிதியது பெற்றனனே.         11.67-நம்பி

 பெரியபுராணம்

தங்கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடுநாள்

See Also: 1. Life history of pukazthuNainAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

The Puranam of Pukazhtthunai Nayanar

The History of Pukazhttunai Nayanar