logo

|

Home >

devotees >

references-to-naminandhi-atikal-mentioned-in-thirumurais

திருமுறைகளில் நமிநந்தி அடிகள் பற்றிய குறிப்புகள்

திருஞானசம்பந்தர் தேவாரம்

தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை

ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்

நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன்

கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே.            1.62.6

 

திருநாவுக்கரசர் தேவாரம்

 

ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப்

பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தா

னாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி

நீரால் திருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே.                  4.102.2 

 

துடிக்கின்ற பாம்பரை ஆர்த்துத் துளங்கா மதியணிந்து

முடித்தொண்ட ராகி முனிவர் பணிசெய்வ தேயுமன்றிப்

பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர் பாதம் பொற௮�்டர் பாதம் பொறுத்தபொற்பால்

அடித்தொண்டன் நந்தியென் பானுளன் ஆரூர் அமுதினுக்கே.               4.102.4 

 

கொடிகொள் விதானங் கவரி பறைசங்கங் கைவிளக்கோ

டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர் எய்தியும் ஊனமில்லா

அடிகளும் ஆரூர் அகத்தின ராயினும் அந்தவளப்

பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு நந்தி புறப்படிலே.           4.102.6 

 

நந்திபணி கொண்டருளும் நம்பன் றன்னை

        நாகேச் சரமிடமா நண்ணி னானைச்

சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்துந்

        தத்துவனைச் சக்கரமாற் கீந்தான் றன்னை

இந்துநுழை பொழிலாரூர் மூலத் தானம் 

        இடங்கொண்ட பெருமானை இமையோர் போற்றும்

அந்தணனை அரநெறியி லப்பன் றன்னை

        அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.        6.33.4 

 

சுந்தரர் தேவாரம்

 

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட

        திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்

பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்

        பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்

ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்

        ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்

அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.4 

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

வேத மறிக்கரத் தாரூர் அரற்கு விளக்குநெய்யைத்

தீது செறிஅமண் கையர்அட் டாவிடத் தெண்புனலால்

ஏத முறுக அருகரென் றன்று விளக்கெரித்தான்

நாதன் எழில்ஏமப் பேறூர் அதிபன் நமிநந்தியே.                   11.31-நம்பி

 

 பெரியபுராணம்

நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதி யாகவே

See also: History of naminandhi nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

Related Content

The Puranam of Naminandi Adikal

The History of Naminandhi Adikal

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்