வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்*கழறிற் றறிவார்க்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
*கழறிற்றறிவார் - சேரமானாயனார். 7.39.6
ஒன்பதாம் திருமுறை
களையா உடலோடு சேரமான் ஆருரன்
விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ள
முளையா மதிசூடி மூவா யிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே. 5
பதினோறாம் திருமுறை
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
இறையும் தெளிகிலர் கண்டும் எழில்தில்லை அம்பலத்துள்
அறையும் புனற்சென்னி யோன்அரு ளால்அன் றடுகரிமேல்
நிறையும் புகழ்த்திரு வாரூ ரனும்நிறை தார்பரிமேல்
நறையுங் கமழ்தொங்கல் வில்லவ னும்புக்க நல்வழியே. 31
திருத்தொண்டர் திருவந்தாதி
மன்னர் பிரான்எதிர் வண்ணான் உடல்உவர் ஊறிநீறார்
தன்னர் பிரான்தமர் போல வருதலும் தான்வணங்க
என்னர் பிரான்அடி வண்ணான் எனஅடிச் சேரன்என்னும்
தென்னர் பிரான்கழ றிற்றறி வான்எனும் சேரலனே. 11.44-நம்பி
ஆணையாம் என நீறு
கண்டு அடிச்சேரன் என்னும்
சேண் உலாவு சீர்ச்
சேரனார் திருமலை நாட்டு
வாண் நிலாவு பூண்
வயவர்கள் மைத்துனக் கேண்மை
பேண நீடிய முறையது
பெரும் தொண்டை நாடு. 12.025.004
See Also:
1. Life history of ceramAn perumAL (kazaRiRRaRivAr) nAyanAr
2. Life history of kazaRiRRaRivAr
2. Life history of kazaRiRRaRivAr nAyanAr
திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais