logo

|

Home >

devotees >

references-to-appudhiyadikal-nayanar-in-thevaram-other-thirumuais

திருமுறைகளில் அப்பூதி அடிகள் நாயனார் பற்றிய குறிப்புகள்

 

திருநாவுக்கரசர் தேவாரம்

 

வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்

பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்

அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி

குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.

 

சுந்தரர் தேவாரம்

 

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட

        திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்

பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்

        பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்

ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்

        ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்

அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.4

 

பதினோறாம் திருமுறை

 

தனமா வதுதிரு நாவுக் கரசின் சரணம்என்னா

மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்தமிழ்க்கே

இனமாத் தனது பெயரிடப் பெற்றவன் எங்கள்பிரான்

அனமார் வயல்திங்கள் ஊரினில் வேதியன் அப்பூதியே.            11.29-நம்பி

 

 பெரியபுராணம்

 

See Also: 1. Life history of appUdhiyaDigaL nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

Related Content

63 Nayanmar Drama-போத மாமுனிவர் - அப்பூதியடிகள் நாயனார் - நா

The Puranam of Appoothi Adikal Nayanar

The History of Appudhi Adikal Nayanar