logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

yaanaitthol-vuritthal-yelithaa

யானைத்தோல் உரித்தல் எளிதா?

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

   
தலம்    :    திருவண்ணாமலை 
பண்    :    நட்டபாடை 
முதல் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
ஒளிறூ புலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால் 
பிளிறூ குரல் மதவாரண வதனம் பிடித்து உரித்து 
வெளிறூ பட விளையாடிய விகிர்தன் இராவணனை 
அளறூ பட அடர்த்தானிடம் அண்ணாமலையதுவே. 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

   
thalam    :    thiruvaNNAmalai 
paN    :    naTTapADai 
First thirumuRai 
 
thirucciRRambalam 
 
oLiRU puli athaLADaiyan umai anycuthal poruTTAl 
piLiRU kural mathavAraNa vathanam piDiththu uriththu 
veLiRU paDa viLaiyADiya vikirthan irAvaNanai 
aLaRU paDa aDarththAniDam aNNAmalaiyathuvE. 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

  
One with the shining skin of tiger as the cloth, 
in order to scare umA, holding and peeling the 
face of the trumpeting elephant, the Lord of strange 
deeds, Who played with ease, One Who crushed 
rAvaNA into the nether-world, is thiruvaNNAmalai! 
 
பொருளுரை

  
ஒளிரும் புலியுரியை ஆடையாக உடையவனும், 
உமை அஞ்சுதல் பொருட்டாக பிளிறும் மதயானையின் 
முகத்தைப் பிடித்து உரித்து மிக எளிதாகவே விளையாடிய 
விநோதமான செய்கையை உடையவனும், 
இராவணனனைப் பாதாளத்தில் விழுமாறு நெரித்தவனுமாகிய 
பெருமானின் உறைவிடம் திருவண்ணாமலையே. 
 
Notes

  
1. இறைவனுடைய வீரத் திருவுருவங்களில் மிகவும் வேகம் 
நிறைந்ததாக - உமையம்மையும் அஞ்சுமாறு அமைந்த - 
திருவுருவம் - ஆனை உரித்த திருவுருவம். ஆனால்  
இத்திருவுருவத்தில் இறைவன் திருமுகத்தில் புன்னகையே  
தவழும். இறைவனுக்கு இது எளிய விளையாட்டே! 
(காண்க: கஜசம்ஹாரமூர்த்தி - /forms-of-lord-shiva/matangari
2. ஒளிறூ - ஒளிர்கின்ற; அதள் - தோல்; வாரணம் - யானை; 
வதனம் - முகம்; வெளிறூ பட - எளிமையாக;  
விகிர்தன் - விநோதமான செய்கை உடையவன்;  
அளறு - பாதாளம். 

Related Content

Sure loss of evils

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொட

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலூர் - குறிகலந்தஇசை

நன்னெறி நாடினால் போதுமா?