திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : பொது
பண் : சாதாரி
நான்காம் திருமுறை
திருவங்கமாலை
திருச்சிற்றம்பலம்
உற்றார் ஆருளரோ - உயிர் கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் ஆருளரோ? 4.9.10
திருச்சிற்றம்பலம்
thirunAvukkaracar thEvAram
thalam : common
paN : cAthAri
Fourth thirumuRai
thiruvangamAlai
thirucciRRambalam
uRRAr Ar uLarO - uyir koNDu pOmpozuthu
kuRRAlaththuRai kUththanallAl n^amakku uRRAr AruLarO? 4.9.10
thirucciRRambalam
Meaning of Thevaram
Who are our associates?
When the life is being taken away,
other than the Dancer at thirukkuRRAlam
Who are our associates?
பொருளுரை
துணையாக நமக்கு யாருளர்?
உடலிலிருந்து உயிரை எடுத்துச் செல்லும்பொழுது
திருக்குற்றாலத்தில் உள்ள கூத்தனைத் தவிரத்
துணையாக நமக்கு யாருளர்?
Notes
1. சிவபெருமானைத் தவிர வேறொருவரும் நிரந்தரத்
துணை அன்று. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
இதனைத் தம் பாடல் தோறும் வலியுறுத்துவர்.
( /thirumurai/eleventh-thirumurai/293/eleventh-thirumurai-aiyadikal-kadavarkon-nayanar-thirukovil-tiruvenpa )