logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

maiyilapur-kabalisvarar-koyil-munpu-yeningkirunthathu

மயிலாப்பூர்க் கபாலீஸ்வரர் கோயில் முன்பு எங்கிருந்தது?

 
 
திருஞானசம்பந்தர் தேவாரம் 
தலம்    :    திருமயிலாப்பூர் 
பண்    :    சீகாமரம் 
இரண்டாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக் 
கூர்தரு வேல் வல்லார் கொற்றங் கொள் சேரிதனில் 
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் 
ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய். 
 
திருச்சிற்றம்பலம் 
 
thirunyAnacamban^thar thEvAram 
thalam    :    thirumayilAppUr 
paN    :    cIkAmaram 
Second thirumuRai 
 
thirucciRRambalam 
 
Ur thirai vElai ulAvum uyar mayilaik  
kUr tharu vEl vallAr koRRam koL cErithanil 
kAr tharu cOlaik kapAlIccaram amarn^thAn 
Arthirai n^AL kANAthE pOthiyO pUmpAvAy. 
 
thirucciRRambalam 
 
Meaning: 
In the high thirumayilai where the tides of the ocean  
walk around the town, in the suburb guarded by the 
people adept with sharp spear, the Lord Who stayed 
at the thirukkapAlIccaram of dense gardens, 
not seeing His thiruvAdhirai festival, can you go, 
oh pUmpAvai! 
 
பொருளுரை: 
கடலின் அலைகளானது ஊரில் உலாவரும் உயர்ந்த மயிலையில், 
கூரிய வேல்வல்லவர்களால் காவல் காக்கப்பட்ட பகுதியில், 
கரிய சோலைகள் சூழ்ந்த திருக்கபாலீச்சரத்து அமர்ந்த பிரானின் 
ஆதிரைத் திருநாள் காணாது, பூம்பாவையே, போவாயோ! 
 
Notes: 
1. திருவாதிரைத் திருநாளும் புராணங்களிலும் சங்க  
இலக்கியங்களிலும் போற்றப்படும் விரதமாகும். இறைவன்  
ஆடல் வல்லானாகக் காட்சி அளித்த கருணை கருதி 
ஆதிரையன் எனத் திருமுறைகள் பலவிடத்தும் விளிக்கும். 
அட்ட மாவிரதங்களில் ஒன்றான திருவாதிரைச் சிறப்பு 
Thiruvathirai Festival  
2. ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை - 
திருமயிலாப்பூர்க் கபாலீச்சரம், திருஞானசம்பந்தப் பெருமான் 
காலத்தில் கடற்கரையிலேயே இருந்தது.  
(மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் - சம்பந்தர்) 
போர்ச்சுகீசியர்களால் இத்திருக்கோயில் இடிக்கப்பட்டு அங்கு 
சாந்தோம் என்ற சர்ச்சு கட்டப்பட்டுள்ளது.  
விவரங்களுக்கு திருமயிலைத் தலபுராணம்:
Kapaleeswarar Temple  
3. திரை - அலை; வேலை - கடல்; கொற்றம் - காவல்; 
சேரி - இருப்பிடம்; கார் - கருமை. 

Related Content

Hinduism A Perspective

The Religion Hinduism - An Introduction

Meaning of Hinduism - Definition of the term Hinduism

Significance of Hinduism : A Special One

Founder of Hinduism - How did Hinduism start?