logo

|

Home >

hindu-shaivaite-festivals-and-vratas >

thiruvadhirai-vrata

Thiruvadhirai Vrata

Thiruvaadhirai is one of the famous vradhas celebrated. This is the thiruvaadhirai nakshaththram in the month of Maarkazi (Maargasira). Thiruvaadhirai is considered as the nakshaththram of Lord n^ataraja. Though the Lord never takes birth and hence no nakshaththram to celebrate, on Thiruvaadhirai He appeared to the holy saints pathanychali and vyaagra paadha.
Once when Mahaa Vishnu was lying down on the great serpent Adhi seesha, Adhi seesha felt Mahaa Vishnu was quite heavy that time. He asked Mahaa Vishnu what was the reason. Mahaa Vishnu said that he was remembering and enjoying the Dance of Lord Shiva. The answer developed the desire in Adhi seesha to see the Great Dance of Lord Shiva. He asked Mahaa Vishnu how his desire could be fulfilled. Mahaa Vishnu asked him to go to Chithamparam and do "tapas". Adhi seesha came to Chithamparam and prayed the Lord for a long time.
There was another muni and devotee of Lord Shiva in that place, called viyaagra paadha. He prayed to God to get the legs of tiger, so that he can pluck flowers early in the morning to offer to the God, before any bee touches the flower. He was also praying God to see His Great Dance for a long time.
Pleased with their prayer the God appeared on the Thiruvaadhirai day and danced in Chithamparam. The Nataraaja image of the Lord is prayed with great devotion this day. In Chithamparam and other temples it is celebrated as Arudraa dharshanam. In this festival abhisheeka (holy anointing) of Lord Nataraaja takes place early in the morning and then He comes around the town. A sweet called kaLi and multi vegetable thALakam are offered and eaten to celebrate this great joy of seeing the dance of the Lord.

 

When observed

ska.ndha purANam describes about this vratam. When the sun shines in the dhanur rAsi that is in the month of mArkazi, in the day of thiruvAdhirai for which rudra is the devata this vratam is observed.

Way of observing

In the morning of thiruvAdhirai one gets up early in the morning and salutes the Dancing Lord. After bathing goes to the abode of Lord shiva and there worshiping the Lord by abhishekam and offerings, lights up the ghee lamps to illuminate the abode. Fasting for the whole day, the next day saluting the Three-eyed Lord serving food for the devotees one has the food.

Glory

munychakEchar, vyAgrapAdhar and the serpant kArkOtakan observed this vratam and saw the blissful dance of the Lord. Saint vyagra pAdhar got austerous upamanyu as his son. A brahman called vipular observing this vratam went to kailash with the body by a splendid divine carrier and returned back. Later he got liberation. As the Lord is dancing blissfully and gracefully on this day this vratam is considered quite auspicious to please the God.

Glory of TiruvAtirai

References to Adhirai in thirumuRai: 

  பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள் 
சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக் 
கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரிகொண் டெல்லி 
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே.  1.105.1  

தாளால் அரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன் 
நாளாதிரை யென்றே நம்பன்றன் நாமத்தால் 
ஆளானார் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைக் 
கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே. 2.44.8  

ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக் 
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில் 
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் 
ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.4  

ஞாலத்தார் ஆதிரை நாளினான் நாடொறுஞ் 
சீலத்தான் மேவிய திருமழ பாடியை 
ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம் பந்தன்சொல் 
கோலத்தாற் பாடுவார் குற்றமற் றார்களே. 3.28.11

ஆதியன் ஆதிரையன் னனலாடிய ஆரழகன் 
பாதியோர் மாதினொடும் பயிலும்பர மாபரமன் 
போதிய லும்முடிமேற் புனலோடர வம்புனைந்த 
வேதியன் மாதிமையால் விரும்பும்மிடம் வெண்டுறையே. 3.61.1  

ஊர்திரை வேலையுள் ளானும் உலகிறந் தொண்பொரு ளானுஞ் 
சீர்தரு பாடலுள் ளானுஞ் செங்கண் விடைக்கொடி யானும் 
வார்தரு பூங்குழ லாளை மருவி யுடன்வைத் தவனும் 
ஆதிரை நாளுகந் தானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.  4.4.6  

முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே 
பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே 
வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள் 
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  4.21.1  

நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோ றும் 
பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும் 
மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட் 
கணியான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  4.21.2  

வீதிகள் தோறும் வெண்கொடி யோடுவி தானங்கள்   
சோதிகள் விட்டுச் சுடர்மா மணிகள் ஒளிதோன்றச் 
சாதிக ளாய பவளமு முத்துத் தாமங்கள் 
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  4.21.3  

குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள் 
பிணங்கித் தம்மிற் பித்தரைப் போலப் பிதற்றுவார் 
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும் 
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  4.21.4  

நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப் 
பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங் 
கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந் 
தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.   4.21.5  

விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார் 
தம்மாண் பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார் 
எம்மான் ஈசன் எந்தை எனப்பன் என்பார்கட் 
கம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  4.21.6  

செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார் 
மைந்தர்க ளோடு மங்கையர் கூடிம யங்குவார் 
இந்திர னாதி வானவர் சித்தர் எடுத்தேத்தும் 
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  4.21.7  

முடிகள் வணங்கி மூவா தார்கண் முன்செல்ல 
வடிகொள் வேய்த்தோள் வான்அர மங்கையர் பின்செல்லப் 
பொடிகள் பூசிப் பாடுந் தொண்டர் புடைசூழ 
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  4.21.8  

துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும் 
இன்பம் நும்மை யேத்து நாள்கள் என்பாரும் 
நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும் 
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  4.21.9  

பாரூர் பௌவத் தானைப் பத்தர் பணிந்தேத்தச் 
சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந் 
தோரூர் ஒழியா துலகம் எங்கும் எடுத்தேத்தும் 
ஆரூ ரன்றன் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  4.21.10  

மூவகை மூவர் போலும் முற்றுமா நெற்றிக் கண்ணர் 
நாவகை நாவர் போலும் நான்மறை ஞான மெல்லாம் 
ஆவகை யாவர் போலும் ஆதிரை நாளர் போலுந் 
தேவர்கள் தேவர் போலுந் திருப்பயற் றூர னாரே.  4.32.5  

ஏற்று வெல்கொடி ஈசன்ற னாதிரை 
நாற்றஞ் சூடுவர் நன்னறுந் திங்களார் 
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார் 
வேற்றுக் கோலங்கொள் வீழி மிழலையே.  5.12.2  

வேத நாயகன் வேதியர் நாயகன்   
மாதின் நாயகன் மாதவர் நாயகன்   
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்   
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.  5.100.1  

பொடிநாறு மேனியர் பூதிப் பையர் புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர் 
அடிநாறு கமலத்தர் ஆரூ ராதி ஆனஞ்சு மாடுமா திரையி னார்தாங் 
கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறுங்   கழிப்பாலை மேய கபாலப் பனார் 
மடிநாறு மேனியிம் மாயம் நீங்க   வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே. 6.12.4  

அரைசே ரரவனாம் ஆலத் தானாம் ஆதிரை நாளானாம் அண்ட வானோர் 
திரைசேர் திருமுடித் திங்க ளானாந் தீவினை நாசனென் சிந்தை யானாம் 
உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம் உமையாளோர் பாகனாம் ஓத வேலிக் 
கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.  6.15.7  

மாதூரும் வாணெடுங்கண் செவ்வாய் மென்றோள் மலைமகளை மார்பத் தணைத்தார் போலும் 
மூதூர் முதுதிரைக ளானார் போலும் முதலு மிறுதியு மில்லார் போலுந் 
தீதூர நல்வினையாய் நின்றார் போலுந் திசையெட்டுந் தாமேயாஞ் செல்வர் போலும் 
ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.  6.21.6  

பூதியனைப் பொன்வரையே போல்வான் றன்னைப் புரிசடைமேற் புனல்கரந்த புனிதன் றன்னை 
வேதியனை வெண்காடு மேயான் றன்னை வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம் 
ஆதியனை ஆதிரைநன் னாளான் றன்னை அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர் 
பாதியனைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.  6.69.3  

தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைச் சூழ்நரகில் வீழாமே காப்பான் றன்னை 
அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை ஆதிரைநா ளாதரித்த அம்மான் றன்னை 
முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற 
தண்டத்திற் றலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே.  6.79.1  

அங்கமே பூண்டாய் அனலா டினாய் ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய் 
பங்கமொன் றில்லாத படர்ச டையினாய் பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய் 
சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச் 
சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன் திருப்புகலூர் மேவிய தேவ தேவே.  6.99.2  

திங்களூர் திருவா திரையான் பட்டினமூர் 
நங்களூர் நறையூர் நனிநா லிசைநாலூர் 
தங்களூர் தமிழான் என்றுபா விக்கவல்ல 
எங்களூர் எய்தமான் இடையா றிடைமருதே.  7.31.6  

ஆதியன் ஆதிரை யன்அயன் மால்அறி தற்கரிய 
சோதியன் சொற்பொரு ளாய்ச்சுருங் காமறை நான்கினையும் 
ஓதியன் உம்பர்தங் கோனுல கத்தினுள் எவ்வுயிர்க்கும் 
நாதியன் நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.  7.97.1  

ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் 
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் 
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து 
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. 9.திருப்பல்லாண்டு.12

வேதியனை வேதப்  பொருளானை வேதத்துக் 
காதியனை ஆதிரைநன்  னாளானைச் - சோதிப்பான் 
வல்லேன மாய்ப்புக்கு  மாலவனும் மாட்டாது 
கில்லேன மாஎன்றான் கீழ். 11.4.8

தலையாய ஐந்தினையுஞ்  சாதித்துத் தாழ்ந்து 
தலையா யினஉணர்ந்தோர்காண்பர் - தலையாய 
அண்டத்தான் ஆதிரையான்  ஆலாலம் உண்டிருண்ட 
கண்டத்தான் செம்பொற் கழல். 11.4.10

மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப் பெருமாள் பவனி தன்னில்    
தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து       
மூவுலகும் களி கூர வரும் பெருமை முறைமை யெலாம் கண்டு போற்றி 
நாவினுக்குத் தனி அரசர் நயக்கு நாள் நம்பர் திரு அருளினாலே   12.1494

சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகராளும் 
மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம் 
இத் தகைமைத்து என்று என் மொழிகேன்? என்று அருள் செய்தார் 
முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை 12.பெரிய புராணம்.1500

ஆய செய் கையில் அமரும் நாள் ஆதிரை நாளில் 
மேய பூசனை நியதியை விதியினால் முடித்துத் 
தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த 
நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார் 12.பெரிய புராணம்.1834

அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே
பெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல்லோரை எழத்    
திருக்கிளரும் ஆதிரை நாள் திசை விளங்கப் பரசமயத்   
தருக்கொழியச் சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க  12.1920

மெய்த்திரு ஞான சம்பந்தர் வாக்கின் வேந்தரை விருப்பினாலே      
அப்பரை இங்கு அணையப் பெறும் பேர் அருள் உடையோம் அந்தனர் ஆரூர்       
எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறில் பெரும் தவத்தோர்   
செப்பிய வண் தமிழ் மாலையாலே திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார்      12.2393

ஆறு அணிந்த சடை முடியார்க்கு ஆதிரை நாள் தொறும் என்றும்      
வேறு நிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி 
நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும் பொன்     
நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார்     12.3986

References to thiruvadirai in sangam literature 

  ஆதிரை முதல்வனிற்கிளந்த நாதர் பன்னொருவர்" (பரிபாடல். 8:6-7)

அரும்பெறல் ஆதிரையான் கலி 150, 20

மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப் - பின்னரும் ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால் ஊர்திரைநீர் வேலி உலகு முத்தொள் க.வா. பரிபாடல்2:76-87  

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,   மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை   விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,   புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,   ‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80   அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,   முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,   பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்   ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்   நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,   வையை! நினக்கு மடை வாய்த்தன்று.   மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,   பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்   தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?   நீ உரைத்தி, வையை நதி!  

 

  • மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று வேதமோதும் அந்தணர்கள் சிவபெருமானிற்கு திருவிழா செய்யத் தொடங்கினர். முப்புரி நூல் அணிந்த அந்தணர் பொன்கலத்தை ஏந்தி சென்றனர்.
  • அம்பா ஆடல் செய்யும் கன்னிப் பெண்கள்- முதிய அந்தணப் பெண்கள் வழிகாட்ட அதிகாலையில் நீராடினர்.
  • அதிகாலையில் நீராடிய இளம்பெண்கள், மார்கழியின் குளிர் வாட்ட, கரையில் வேதமந்திரங்கள் கூறி வளர்த்த வேள்வி அக்னியின் அருகில் சென்று தங்கள் ஈர ஆடையை காயச் செய்தனர். அந்தணர் வேத வேள்விகளால் மழை தொடர வைகை நீ பெருகுகிறாய்.
  • இவை மார்கழி மாதத்தின் பாவை நோன்பின் தொன்மையையும் திருவாதிரை பண்டிகை கொண்டாடுதலின் வழமையையும் மெய்பிக்கின்றது.

Related Content

The Glory of Arudra Dharisanam

திருக்கோயில் மார்கழி வழிபாடு