திருச்சிற்றம்பலம்
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. மாதங்களில் சிறந்தது மார்கழி; இவ்வழக்கு, மார்கழி மாதம் இறைவழிபாட்டிற்கே உரியது என்று சான்றோர்கள் வகுத்து அவ்வண்ணமே கடைப்பிடித்து வந்தமையால் ஏற்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்கண்டேய புராணம் உரைக்கின்றது; மிருத்தியுஞ்சய ஹோமம் செய்ய இந்த மாதமே சிறந்த மாதமாக சொல்லப்படுகின்றது. திருவாதிரை விழா மார்கழி மாதத்தில்தான் கொண்டாடப்படுகின்றது. திருவாதிரை விரதமிருந்து நடராஜரை வழிபாடு மேற்கொண்டால் நடன கலையில் சிறந்து விளங்கலாம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.
திருவருளின் துணைகொண்டு, நமது Shaivam.org மார்கழி மாத வழிபாட்டை திருநெல்வேலி மாவட்டப்பகுதி சிவாலயங்களில் தன்னார்வளர்கள் மற்றும் உள்ளூர் பெருமக்களின் ஒத்துழைப்புடன் கடந்த 6-ஆண்டுகளாக வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றது. இவ்வழிபாடானது ஓரிரு சிவாலயங்களில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்த வகையில், தற்போது (2018-19) நாற்பது சிவாலயங்களில் இவ்வழிபாடானது திருவருளால் நடைபெற இருக்கின்றது. இந்நாற்பது சிவாலயங்கள் என்பது பெருகி அனைத்து சிவாலயங்களிலும் மார்கழி வழிபாடானது நடைபெற வேண்டும் என்பது இறைவனின் திருவருளாகவும் இருக்கின்றது. இதற்கு அந்தந்த உள்ளூர் பெருமக்கள் - இளைஞர்கள் மற்றும் வெளியூர் வாழ் அன்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாங்களாகவோ அல்லது நமது Shaivam.org-ன் வழிகாட்டுதலின் பேரிலோ செயல்பட்டு தங்கள் ஊரில் உள்ள சிவாலயங்களில் இவ்வழிபாட்டை தொடங்கலாம். இதற்கு நமது Shaivam.org இணையதளம் வழிகாட்டுதற்பொருட்டு தயாராக இருக்கின்றது.
பல சிவாலயங்களில் நடந்து கொண்டிருக்கும் இவ்வழிபாடானது தொடர்ந்து நடைபெறவும்; மேலும் அனைத்து சிவாலயங்களிலும் தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆண்டு தோறும் முற்றாது நடைபெறவும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற மேலான பங்களிப்பை நல்கிட வேண்டுகிறோம்.
தற்போது 40 சிவாலயங்களில் மார்கழி வழிபாடானது நமது Shaivam.org-ன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஒரு சிவாலயத்திற்கு மார்கழி முழுவதிற்குமான செலவு தொகையானது Rs.20,000/- ஆகும்.
மார்கழி வழிபாடு நடக்கும் -- சிவாலயங்கள் விபரம்
Sl.No | Temple | Place |
1. | Sathyavageesar | Kalakkadu |
2. | Kulasekaranathar | Patthai |
3. | Soundarapandiswarar | Karuvelankulam |
4. | Aathiyavarneshwarar | Seval |
5. | Chokkanathar | Valliyur |
6. | Thiruvaludheeshwarar | Eruvadi |
7. | Ramalingeshwarar | Puliyurkurichi |
8. | Arunachaleswarar | Kadampoduvazhvu |
9. | Vazhavallabapandiswarar | Dharuvai |
10. | Arunachaleswarar | Ponnakkudi |
11. | Shiva temple | Poolam |
12. | Shiva temple | Senbagaramanallur |
13. | Shiva temple | Kovilammalpuram |
14. | Shiva temple | Sirumalanchi |
15. | Shiva temple | Karisoozhndamangalam |
16. | Sri Thiruvalurtheeswarar | Perunkulam |
17. | Sri Azhakiyakoothar | Kattarimangalam |
18. | Sri Sankaralingaswamy | Peikkulam |
19. | SriVaragunapandishwarar | Radhapuram |
20. | Shiva temple | Thidiyur |
21. | Sri Nellaiyappar | Padmaneri |
22. | Sri Marudhappar | Padmaneri |
23. | Sri Kailasanathar | Singikulam |
24. | Sri Kodilingeswarar | Agasthiyarpatti |
25. | Sri Selvavinayagar | Sivanthipuram |
26. | Sri Thiruvenkadar | Pappankulam |
27. | Sri Kulasekaramudaiyar | Narasinganallur |
28. | Sri Viswanathar | Karungadu |
29. | Shiva temple | Karukurichi |
30. | Sri Thirumular | Ambasamuthiram |
31. | Murugan temple | Ambasamuthiram |
32. | Sri Agasthiswarar | Sambavurvadakarai |
33. |
Sri Kasiviswanathar | Sattappatthu |
34. | Kaliyamman temple | Daana |
35. | Karbaka temple | Daana |
36. | Sakthi temple | Podhikaiyadi |
37. | Sri Chokkanathar | Oormel Azhakiyan |
38. | Sri Veerapandiswarar | Veeranallur |
39. | Sri Pakadikoothar | Kallidaikkurichi |
40. | Sri Bhuminathar | Veeranallur |
41. | Sri Chokkanathar | Vakaikkulam |
42. | Sri Kasiviswanathar | Vikramasingapuram |
43. | Sri Narasinganathar | Azhwarkurichi |
ஆக மார்கழி மாதத்தில் 40 சிவாலயத்திற்கு மட்டுமே (40 x 20000) Rs.8,00,000/- செலவாகின்றது. இருப்பினும் மேலும் பல சிவாலயங்களில் மார்கழி வழிபாடானது தொடங்க இருக்கின்றது. ஆகையால் அன்பர் பெருமக்கள் தாம் மட்டுமல்லாது தமது வம்சமே சிவபுண்ணியத்தைப் பெறும் பொருட்டும், தங்களின் பங்களிப்பால் சிவாலயத்தில் விளக்கேற்றும் பெரும் பாக்கியத்தையும், அனைத்துப் பாவங்களையும் போக்கும் சிவபுண்ணியத்தையும் பெறும் பொருட்டும் தாங்கள் தங்களால் இயன்ற நன்கொடை செய்து கிடைக்கரிய இச்சிவ புண்ணியத்தில் பங்குபெற அன்புடன் வேண்டுகிறோம்.
விருப்பமுடைய அன்பர் பெருமக்கள் சிறு தொகையாயினும் அல்லது மார்கழி மாதத்தில் ஏதேனும் ஒரே ஒரு சிவாலயத்தையாவது தத்தெடுத்துக்கொண்டு முழுபங்களிப்பை (ரூபாய் 20,000/-) நல்கிடவும்; மேலும் அன்பர் பெருமக்களிடம் தெரிவித்து இச்சிவபுண்ணிய பங்களிப்பை பெற்றுத் தந்திடவும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்கொடை அனுப்பும் அன்பர் பெருமக்கள் - தொகை, அனுப்பப்பட்ட தேதி, எந்த கோயிலுக்கு சேர்க்கப்பட வேண்டும் போன்ற விபரங்களை Shaivam.org-ன் பின்வரும் மின்னஞ்சலுக்கு (email id) அனுப்ப வேண்டுகிறோம்.
E-Mail ID : [email protected]
தொடர்பு : +91 - 9480740560.
ஒவ்வொரு ஆண்டும் இவ்வழிபாடானது மடங்கு மடங்காக அதிகரித்து பொதுமக்களும் ஊரும் நாடும் செழிப்புறவும், இயற்கை பேரழிவுகள், வறுமை, நோய், தரித்திரம் நீங்கி அனைவரும் நிம்மதியாக வாழவும் நாம் ஒவ்வொருவரும் சிவாலயங்களில் மார்கழி வழிபாட்டிற்கும் நித்திய வழிபாட்டிற்கும் தம்மால் இயன்ற ஏதேனும் ஒருவகையில் உதவி செய்திடவும் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு நல்கிடவும் உறுதிபூண்டு அதன்படி செயலாற்றவும்; இதை மற்றவர்களுக்கும் தெரிவித்து நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து நம் உள்ளூர் சிவாலயங்களில் மட்டுமல்லாது எந்த ஒரு சிவாலயத்திலும் பூஜைகள் தடைபடாமல் இருக்க நம்மால் இயன்றதை செய்ய வேண்டுகிறோம்.
2018ம் ஆண்டு மார்கழி வழிபாட்டிற்கான வரவு செலவு விபரம்:
மொத்த மதிப்பீடு: 8 லட்சம்
சிவ பூஜைக்கு நன்கொடை வழங்கிய பெருமக்கள் :
வ.எண் | பெயர் |
தொகை (ரூ) |
குறிப்பு |
1. | மாதவராம் | 5,000.00 | |
2. | உதயசங்கர் | 10,000.00 |
ஆழ்வார்குறிச்சி ஸ்ரீநரசிங்கநாதர் திருக்கோயிலுக்கு இந்த காணிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. |
3. | பிரகாஷ் - ஓசூர் | 2,000.00 | |
4. | அருண்குமார் | 501.00 | |
5. | S. இரவிச்சந்திரன் - கிருஷ்ணாபுரம் | 500.00 | |
6. | P கிருஷ்ணமூர்த்தி | 2,000.00 | |
7. | R தினேஷ் | 500.00 | |
8. | பொ.ஶ்ரீதரன் | 20,000.00 | |
9. | சாம் சர்வேயர்ஸ் | 5,000.00 | |
10. | G பார்த்தசாரதி | 2,000.00 | |
11. | இராமசேஷன் - நாகர்கோயில் | 5,000.00 | |
12. | G காமாட்சி | 20,000.00 | |
13. | VR கார்த்திகேயன் | 1,500.00 | |
14. | S. செந்தில் | 1,001.00 | |
15. | பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர் | 2,000.00 | |
16. | ராமசுப்ரமணியன் | 1,001.00 | |
17. | V R சங்கர் | 2,000.00 | |
18. | P சிவக்குமார் | 5,000.00 | |
19. | கார்த்திகேயன் அனந்தகிருஷ்ணன் | 5,000.00 | |
20. | R கோவிந்தராஜன் | 3,000.00 | |
21. | V வரலக்ஷ்மி | 1,000.00 | |
22. | T பாஸ்கர் | 1,000.00 | |
22. | விஜயராகவன், ஓசூர் | 1,000.00 | |
23. | P பிரபாகரன் | 1,500.00 | கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் ஆலயத்திற்கு |
24. | முத்தையா, பெங்களூர் | 10,000.00 | |
மொத்தம் | 107,503.00 |
மு.செங்குட்டுவன், தில்லைத் திருமுறை மன்றம் 5000 ரூபாய்க்குத் திருவெம்பாவைப் புத்தகங்கள்.
பத்மநேரி விழா உபயதாரர்கள்:
படா எ கனகமணி
கணேஷமூர்த்தி
மாலைகள் செல்வகணபதி
கிருஷ்ணா மளிகை
சமையல் சங்கரபாண்டியன் கயத்தாறு
S No | Expense | Amount |
1 | Thiruvempavai Books Printing | 9,000 |
2 | Shaivam.org Banners | 3,600 |
3 | Thalams | 20,755 |
4 | Naivedyam at temples | 1,07,512 |
5 | Transport charges for books and rewards | 16,350 |
6 | Honorarium for Odhuvars | 32,100 |
7 | 3000 "Saivathin Thiravukol" Book Printing for reward | 63,300 |
8 | Lamps for reward | 3,08,750 |
9 | Dhotis for reward | 2,20,800 |
Total Expense | 7,82,167 |
Saivathin Thiravukol Books 500 10,550
Lamps 303 74,841
Dhoti 507 88,725
Total remaining in kind = 1,74,116
Net Expense = 6,08,051
Total contributions received = 1,07,503
Expenditure bourne by Shaivam.org = 5,00,548 INR
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
திருச்சிற்றம்பலம்
See Also :