logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-marudha-tree

temple-trees-தலமர சிறப்புகள் மருத மரம்

தலமர சிறப்புகள்


மருதம் Terminalia arjuna, W & A.; Combretaceae.

மருதம் / marudham / Terminalia arjuna
மருதம்

 

மருந்தவன் வானவர் தானவர்க்கும் 
பெருந்தகை பிறவினொ டிறவுமானான் 
அருந்தவ முனிவரொ டால்நீழற்கீழ் 
இருந்தவன் வளநகர் இடைமருதே.

                                                                                    - திருஞானசம்பந்தர்.

 

 

திருவிடைமருதூர், திருஇடையாறு , திருஅம்பர் பெருந்திருக்கோயில்திருஅம்பர் மாகாளம் , திருப்பருப்பதம்  ஆகிய திருத்தலங்களில் மருதம் தலமரமாக விளங்குகின்றது. இது குறுகலான நீள்சதுர இலைகளையும் சாம்பல்நிற வழுவழுப்பான பட்டையையும் உடைய உயர்ந்து வளரும் பெரிய இலையுதிர் மரமாகும். பட்டை சதைப்பற்றாக இருக்கும். தமிழக ஆற்றங்கரைகளில் தானே வளர்ந்து காணப்படும். சாலையோரங்களில் நடப்பட்டுள்ளன. இதில், கருமருது, கலிமருது, பூமருது என பல்வேறு இனங்கள் காணப்படுகின்றன. இலை, பழம், விதை, பட்டை முதலியன மருத்துவக் குணங்கொண்டவை.

 

இலை, பழம், விதை ஆகியவை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். பட்டை உடலுரமாக்கும்; இதய பலவீனம் தீர்க்கும்; இசிவு நீக்கும்.

 

 

< PREV <
மந்தாரைச்செடி
Table of Content > NEXT >
மாதவி

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)