|
Home > Temples of India >
pADal peRRa sthalam
தலமர சிறப்புகள்வன்னி மரம்
வன்னி
Prosopis spicigera, Linn.; Mimosaceae
 வன்னி மரம்
வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர்தூவி
நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில்
கொம்பார் குரவு சொகுடி முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே.
- திருஞானசம்பந்தர்.
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), திருவான்மியூர், மேலைத் திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி முதலிய பதினைந்துக்கும் மேற்பட்ட
திருக்கோயில்களில் தல மரமாக வன்னி விளங்குகின்றது. வில்வத்திற்கு அடுத்தபடியாக மிகுதியான கோயில்களில் தலமரமாக உள்ளது
வன்னியேயாகும்.
இஃது ஓர் முள்ளுள்ள இலையுதிர் மரம். மிகச் சிறிய கூட்டிலைகளைக் கொண்டது. சதைப்பற்றுடைய உருளைவடிவக் காய்களை
உடையது. வடதமிழ் நாட்டில் கரிசல் நிலங்களில் தானே வளர்கிறது. தோட்டங்களில் ஆங்காங்கே முளைக்கும் இவ்வன்னி மரங்களைப்
பொதுவாக யாரும் வெட்டுவதில்லை. அந்த அளவுக்குப் புனிதமாக கருதப்படும் மரமாகும். மரம் முழுமையும் மருத்துவக் குணமுடையது.
இம்மரம் காய்ச்சல் போக்குதல், சளியகற்றுதல், நாடிநடையையும் உடல் வெப்பத்தையும் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை
உடையது.
|