தலமர சிறப்புகள்

(சரக்) கொன்றை மரம்



(சரக்) கொன்றை Cassia fistula, Linn.; Caesalpiniaceae பொன்னினார் கொன்றை யிருவடங்கிடந்து பொறிகிளர் பூணநூல் புரள மின்னினார் உருவின் மிளிர்வதோர் அரவம் மேவுவெண்ணீறுமெய் பூசித் துன்னினார் நால்வர்க் கறம்அமர்ந் தருளித் தொன்மையார் தோற்றமுங்கேடும் பன்னினார் போலும் பந்தணை நல்லூர் நின்றயெம் பசுபதியாரே. - திருஞானசம்பந்தர்.

திருத்துறையூர், திருப்பந்தணை நல்லூர், திருஅச்சிறுபாக்கம், திருக்கோவலூர் முதலிய பதினைந்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தலமரமாக கொன்றை விளங்குகிறது. வன்னிக்கு அடுத்தபடியாக அதிகமான திருக்கோயில்களில் தலமரமாக அமைந்துள்ளது.

நீள் சதுரமான கூட்டிலைகளையும் சரஞ்சரமாய்த் தொங்கும் பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூங்கொத்துகளையும் நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடைய இலையுதிர் மரமாகும். தமிழகமெங்கும் இயற்கையாக வளர்கிறது.

பட்டை, பூ, வேர், காய் ஆகியவை மருத்துவப் பயனுடையதாக விளங்குகிறது.

இம்மரத்தின் மருத்துவக் குணங்கள், நோய் நீக்கி உடல் தேற்றும்; காய்ச்சல் தணிக்கும்; மல மிளக்கும், வாந்தியுண்டாக்கும்; உடல் தாதுக்களை அழுகாமல் தடுக்கும். பூ வயிற்று வாயு அகற்றும்; நுண்புழுக்களைக் கொல்லும்.


< PREV <
குருந்தமரம்
Table of Content > NEXT >
கோங்குமரம்