ஐயனை அரற்றுமின்

திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : திருவேடகம் பண் : கொல்லி மூன்றாம் திருமுறை திருச்சிற்றம்பலம் பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார் வைகையின் வடகரை மருவிய ஏடகத்து ஐயனை அடிபணிந்து அரற்றுமின்; அடர்தரும் வெய்ய வன் பிணி கெட வீடு எளிதாகுமே. 3.32.6 திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar thEvAram thalam : thiruvEDagam paN : kolli Third thirumuRai thirucciRRambalam poykaiyin poziluRu puthumalarth thenRal Ar vaikaiyin vaDakarai maruviya EDagaththu aiyanai aDipaNin^thu araRRumin; aDar tharum veyya van piNi keDa vIDu eLithAgumE 3.32.6 thirucciRRambalam Meaning: Saluting the Feet incessantly hail the Lord at thiruvEDakam on the northern bank of vaikai wandered by the fresh floral breeze from the gardens and ponds! The crowding fiery cruel misery will ruin and liberation will become easier! பொருளுரை: குளங்களிலும், சோலைகளிலுமிருந்து வரும் புதுமலர் வாசங்கமழ் தென்றல் ஆர்கின்ற வைகையாற்றின் வடகரையில் உள்ள திருவேடகத்துத் தலைவனைத் திருவடி வணங்கிப் பலபல சொல்லிப் புகழ்மின்! அடர்த்து வருவதும் வெம்மையானதும் கொடியதுமான பிணி ஒழிய முத்திப் பேறு எளிதாகக் கிடைக்கும்! Notes:

< PREV <
அலியும் ஆயவன்
Table of Contents > NEXT >
இறைவன் புகழை விரும்பிப் பாடுங்கள்

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page