நார்த்தாம்பூண்டி அ/மி ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் உடனுறை அ/மி ஸ்ரீ கயிலாசநாத சுவாமி
திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

n^ArththAmpUNDi srI periyan^Ayaki ambAL uDanuRai srI kailAsan^Athar swAmy
temple thiruppaNi (Renovation)
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோயில், நார்த்தாம்பூண்டி, திருவண்ணாமலை வட்டம் & மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

தலவரலாறு / கோயில் சிறப்பு:

சான்றோர் மகிழ்ந்துறையும் தெண்ணீர் வயல் தொண்டை நன்நாட்டின்கண் அமைந்து நினைக்க முக்தி நல்கும் திருவருணைக்கு வடபாலும், சீர்மல்கும் சேயாற்றின் தென்பாலும், சப்த கயிலாய தலங்களில் தலைமையாக அமைந்ததும், சப்த ரிஷிகளுள் தலைமைப் பதவி பெற ஸ்ரீநாரத மாமுனிவர் பூஜித்ததும், பல்லவ அரசர்களாலு, சோழ வேந்தர்களாலும், கிருஷ்ண தேவராயர் காலந்தொடங்கி திருவருணை அரசர்கள் வரை பண்டு தொட்டு பராமரித்து திருப்பணிகள் செய்யப்பட்ட திருக்கோயிலாகும்.

திருப்பணி விபரம்:

இவ்வாலயம் நான்காம் நூற்றாண்டு முதல் புனருத்தாரணம் செய்து அதைத் தொடர்ந்து வழிபாடு நடைபெற்று வருகிறது. தற்போது இவ்வாலயத்தின் உட்புறம் தரைத்தளம் கருங்கற்களாலும், சிமெண்ட்டினாலும் திருப்பணிகள் நடைபெறுகின்றது. முகப்பு மண்டபத்தில் ஏழுநிலை இராஜகோபுரம் அமைக்கும் பணி சுமார் ரூ.25,00,000/- மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. எனவே இதைக் கண்ணுறும் அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து தாங்களும் தங்களின் வழித்தோன்றல்களும் அ/மி ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் உடனுறை அ/மி ஸ்ரீ கயிலாசநாத சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

 
	கிராமவாசிகள்,  
	நார்த்தாம்பூண்டி, 
	சி. ஆண்டாப்பட்டு, 
	நெல்லமேடு,  
	முத்திரசம்பூண்டி, 
	திருவண்ணாமலை மாவட்டம், 
	தமிழ்நாடு.  

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page