78.கிளாம்பாக்கம் அ/மி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை அ/மி ஸ்ரீஅகத்தீஸ்வரர் சுவாமித் திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

78.kiLAmbAkkam srI akilANtESwari udanuRai srI akaththISwarar swAmy temple (Renovation) thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அ/மி ஸ்ரீஅகத்தீஸ்வரர் சுவாமித் திருக்கோயில், 78.கிளாம்பாக்கம், திருவள்ளூர் வட்டம் & மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

சிறப்பு :

இத்திருக்கோயில் சுமார் 1004 ஆண்டுகளுக்கு முன் முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. அப்போது இக்கிராமத்தில் பெயர் "களத்தைநகர்" என அழைக்கப்பட்டதாகவும், இத்திருக்கோயிலுக்கு விளக்கெரிக்க கொடுக்கப்பட்ட தானங்கள் பற்றியும் இவ்வாலய கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகத்திய முனிவர் தன் தவ வலிமையை மேம்படுத்த பல ஊர்களில் சிவாலயங்களை கட்டி வழிபட்டார்; அவ்வாறு அவர் வரும்பொழுது இவ்வூரில் தங்கி சிறப்பு பூஜையும் திருவிழாக்களும் செய்து வழிபட்டார். பிறகு அருகிலுள்ள புலியூர் கிராமத்திற்குச் சென்று அவ்வூர் இறைவனுக்கு வசந்த உற்சவம் செய்ததாகவும் அதன்பின் வில்வாரணயம் (வில்லிவாக்கம்) சென்று பூஜை செய்து திருவேற்காடு சென்று இறைவனை வழிபட்டதாக இவ்வாலய வரலாறு தெரிவிக்கின்றது. இவ்வாலய அம்பாள் அகிலாண்டேஸ்வரி மூன்று கண்களைக் கொண்ட முக்கண் நாயகி ஆவாள். இவ்வன்னைக்கு பாலாபிஷேகம் செய்யும்போது சுவாமியைப் போன்று சிறப்பாக அமைந்திருக்கும் மூன்றாவது கண்ணை கண்டுத் தரிசிக்கலாம்.

இவ்வாலய சுவாமியின் மூலவர் திருமேனி இரண்டு; அதில் ஒரு திருமேனி காஞ்சியில் உள்ள கைலாசநாதரைப் போன்று உள்ளார்; கருவறையில் உள்ள மற்றொரு திருமேனி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரைப் போன்று உள்ளார்.

திருப்பணி விபரம்:

திருவருள் துணைகொண்டு இக்கோயில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது; இத்திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று, விரைவில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

இதைக் கண்ணுரும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து எல்லாம் வல்ல ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை அ/மி ஸ்ரீஅகத்தீஸ்வரர் சுவாமித் திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


R.M. Kumar - 09840694182 J. Kalyanasundaram - 09789584975 M. Senthilkumar - 09445311106 S. Sugumar - 09962279742. A/c Name : Akatheeswarar Iraippani Mantram, A/c No : 6347 / IND Name of the Bank: Central Cooperative Bank, Nungambakkam Br., Chennai - 600 034.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page