தீயத்தூர் அ/மி ஸ்ரீ பிரகந்நாயகி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ சகஸ்ஹரலெக்ஷ்மீஸ்வரர் சுவாமி
திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

thIyaththUr srI pirakan^n^Ayaki samEtha srI sahasharalakshmIswarar temple thiruppaNi
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ சகஸ்ஹரலெக்ஷ்மீஸ்வரர் திருக்கோயில், தீயத்தூர், ஆவுடையார்கோயில் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்.

சிறப்பு:

அக்னிபகவான் - தீ, பிரம்மமூர்த்தி - அயன், சூரியபகவான் - ஊர் என தீயத்தூர் பெயர் உருவானதை அகஸ்திய முனிவர் கூறியுள்ளார்; மகாலக்ஷ்மி ஆயிரத்தெட்டு அக்னிதாமரை மலர்களால் இவ்விறைவனை அர்ச்சித்ததால் இவ்விறைவருக்கு ஸ்ரீ சகஸ்கரலக்ஷ்மீஸ்வரர் என்ற திருநாமம் மலர்ந்தது; உலகிலேயே முதன் முதலாக ஆங்கிரஸ முனிவரால் ஹோமம் வளர்க்கப்பட்ட தலம்; உலகிலேயே முதன் முதலாக சாம்பிராணி புகை போடப்பட்டத் தலம்; விநாயகரின் திருமணத்திற்கு விநாயகரே நேரில் வந்து சிவனை தரிசித்து ஹோமத்திற்காக அக்னியைப் பெற்றத் தலம்; சூரிய பகவானின் மனைவி சாயா தேவி தவம் புரிந்த தலம்; ஸ்ரீ பிரம்மா தம் ருத்ர ஹோமத்திற்காக பிரம்மாக்னியை இத்தலத்திலிருந்து எப்போதும் பெறுகிறார்; ஸ்ரீ ராமபிரான் நேரில் தரிசித்தத் தலம்; திருமகளும், அம்பிகையும் மானிட வடிவில் நடந்து வந்து சிவனைத் தரிசித்தத் தலம்; அக்னி பகவான் பலத்த சாபத்தால் தாம் இழந்த சக்தியைத் திரும்பப் பெற்றத் தலம்; சூரிய பகவான் இன்றும் தன் ஒளியைத் தீயத்தூர் எல்லையில் மட்டும் வெப்பம் குறைவாக வீசுகிறார்; சித்தர்களும், மகரிஷிகளும் இத்தலத்தில் பர்ணசாலை அமைத்து ஆயிரத்தெட்டு ஹோம குண்டங்களை இரவு பகலாக வளர்த்த இடம்; உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தோர் பிறந்த நாள், திருமண நாளில் கண்டிப்பாக வழிபட வேண்டிய தலம்; கர்ஜீனிய முனிவர் பிரபஞ்சத்திலே சுயம்புக்கெல்லாம் மூத்த மிகப் பழமையான தீயத்தூர் சிவலிங்கத்தை மஹாலக்ஷ்மி ஆயிரத்தெட்டு அக்னிதாமரை மலர்களால் பூஜை செய்வதை நேரில் பார்த்து அதிசயித்தார்; கமலாலய அக்னி தீர்த்தத்தில் அக்னிதாமரை பலகோடி யுகங்களுக்கு ஒருமுறை ஒரே ஒரு அக்னிதாமரை பூத்தத் தலம்; கணவனின் அன்பு கிடைக்கப்பெறாத பெண்கள் இத்தல இறைவனை வழிபடுவதால் தன் கணவனின் பரிபூரண அன்பு கிட்டும் என்பது சிறப்பு; ஸ்ரீராமர் பித்ரு ஹோமம் வளர்க்க அரனைக் கட்டையில் அக்னியைப் பெற்றத் தலம்; சீதை அக்னி பிரவேசம் செய்தபின் அவள் திருமேனியைக் காக்கும் ராமநாமாக்னி வளையத்தைச் சுற்றி உஷ்ணம் வந்ததற்காக மன்னிபுக்கோரி பிராயசித்தம் பெற்றத் தலம்; சர்வேஸ்வரன் தீயத்தூர் புனித பூமியில் தான் சிருஷ்டிக்கும் முன் ஏகாந்த சீருஷ பத யோகம் பூண்டார்; அங்கபிரதட்சணம் - அண்ணாமலை, தேனிமலை, நெடுங்குடி, திருக்கோலக்குடி, தீயத்தூர் ஆகிய தலங்களில் செய்வது தீவினைகளின் கொடுமைகளை இப்பிறவியிலேயே தனிக்கும் இத்தகைய சிறப்பு பெற்றது இத்திருத்தலம்.

திருப்பணி விபரம்:

நிகழும் சுபஸ்ரீ சர்வஜித் வருடம் ஐப்பசித் திங்கள் 07ம் நாள், (24 - 10 - 2007) புதன்கிழமை, திரயோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 09.45க்கு மேல் 11.45 மணிக்குள் மகர லக்னத்தில் அ/மி ஸ்ரீ பிரகந்நாயகி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ சகஸ்ஹரலக்ஷ்மீஸ்வர சுவாமி திருக்கோயில் பால ஸ்தாபனம் செய்து திருப்பணி ஆரம்பம் செய்வதால் அதுசமயம் பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு, தங்களால் இயன்ற பொருள் உதவியோ, பண உதவியோ செய்து அ/மி ஸ்ரீ பிரகந்நாயகி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ சகஸ்ஹரலக்ஷ்மீஸ்வர சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:

திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருள் உதவியோ, பண உதவியோ செய்ய விரும்புவோர் திருப்பணிக் குழுவினரைத் தொடர்பு கொள்ளவும் அல்லது சிவாச்சாரியாரைத் தொடர்பு கொல்லவும்.

பரம்பரை ஆலய அர்ச்சகர், சர்வசாதகம்
ஸ்ரீ. T. ஷண்முக சிவாச்சாரியார்
திருப்புனவாசல்,
Ph : 04371 - 239212,
Mob : 09841083992.

Back to thirupaNi page
Back to Important Events Page
Back to Shaivam Home Page