பொன்விளைந்தகளத்தூர் அ/மி ஸ்ரீ முன்குடுமீஸ்வரர் சுவாமி
திருக்கோயில் தேர்த்திருப்பணி
- - - - - - - - -

ponviLaindhakaLaththUr srI munkuDumISwarar swAmy
temple thErth thiruppaNi (Car Renovation)
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ முன்குடுமீஸ்வரர் சுவாமித் திருக்கோயில், பொன்விளைந்தகளத்தூர், திருக்கழுக்குன்றம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

திருப்பணி விபரம்:

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய கூற்றுவநாயனாரால் பாடல் பெற்று நளவெண்பா எழுதிய புகழேந்திப் புலவர் மற்றும் கவிவாணர்களால் வழிபாடு பெற்றதுமாகிய அ/மி. மீனாட்சி அம்பாள் சமேத அ/மி முன்குடுமீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் சித்திரை பௌர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, கந்தர் சஷ்டி மாதாந்திர பௌர்ணமி, அன்னாபிஷேகம், பிரதோஷ வழிபாடு, கார்த்திகை தீபம், தைப்பூசம், மகா சிவராத்திரி போன்ற விழாக்களுடன் பங்குனி உத்திர பெருவிழாவும் செவ்வனே நடைபெற்று வருவதில் பிரம்மோற்சவ 7-ம் நாள் விழாவாகிய தேர்த் திருவிழாவிற்கு தேர் இல்லாமல் விழா நடைபெறுவது நிறைவானதாக இல்லாமையினால் வரும் 2010-ம் ஆண்டு விழாவிற்குள் தேர்ச் செய்து உற்சவம் செய்து வைக்க இருப்பதால் இதைக் கண்ணுரும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து எல்லாம் வல்ல தென்னாடுடைய சிவன் ஸ்ரீமுன்குடுமீஸ்வரர் திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

	ஸ்ரீ சிவசக்தி சபை,
	ஸ்ரீ முன்குடுமீஸ்வரர் சுவாமித் திருக்கோயில், 
	பொன்விளைந்தகளத்தூர் - 603 405. 
	காஞ்சிபுரம் மாவட்டம்.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page