சித்தேரிக்கரை - பாக்கம் அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ ஆனந்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Sitherikkarai - Pakkam village Sri Anandavalli Samedha Sri Anandheeswarar swamy temple (Renovation) Thiruppani
* * * * *


அமைவிடம்:

அருள்மிகு ஸ்ரீ ஆனந்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில், சித்தேரிக்கரை - பாக்கம், திருநின்றவூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

The renovation of Sitherikkarai - Pakkam village Sri Anandheeswarar

 • For more images of this Temple

  தலச் சிறப்பு:

  பாக்கம் கிராமம், சித்தேரிக்கரையில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இராஜேந்திர சோழனால் கி.பி.1022-ம் ஆண்டு இறைவனுக்கு திருக்கோயில் எழுப்பப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்பதை இக்கோயில் பற்றிய கல்வெட்டின் மூலம் அறிய முடிகின்றது. இக்கோயில் தலவிருட்சமான கல்லால மரத்தை நெய் தீபம் ஏற்றி (தெக்ஷிணாமூர்த்தியாக பாவித்து) வலம் வந்து இத்தலத்து இறைவனை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என மக்களால் நம்பப்படுகிறது.

  திருப்பணி விபரம்:

  இறைவனின் அருளாணையின்படி, கிராம மக்கள் மற்றும் இறையன்பர்களால் திருப்பணி வேலைகள் துவங்கப்பட்டு, திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. விருப்பமுள்ள அன்பர் பெருமக்கள் திருப்பணி வேலைகள் தங்குதடையின்றி நடைபெற்று விரைவில் திருக்குடமுழுக்கு நடைபெற தங்களால் இயன்ற நிதியுதவி - கட்டுமானப் பொருட்கள் அளித்து எல்லாம் வல்ல அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ ஆனந்தீஸ்வரர் சுவாமி திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

  சிவப்பணியின் பெருமை

  சிவன் கோயில் திருப்பணிகளுக்கு உதவுபவர்கள், திருக்கோயிலை கட்டியவர்களைவிட நான்கு மடங்கு சிவ புண்ணியம் பெறுவார்கள் என்பது மாதவச் சிவஞான சுவாமிகளின் திருவாக்காகும்.

  	"முரிந்து வீழ்ந்தன வெடித்தன உடைந்தன முதிய 
  	நெரிந்தவாகிய கோபுரம் நெடுமதில் பிறவும்
  	தெரிந்து முன்னையிற் சீர்பெறப் புதுக்குவோர் பண்டு 
  	புரிந்து ளோர்பெறும் புண்ணியம் நான்மடங்கு உறுவர்."
  						- காஞ்சிப்புராணம்.
  

  குறிப்பு:

  இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.

  >	ஆலய திருப்பணி குழு மற்றும் பாக்கம் கிராம மக்கள்
  	சித்தேரிக்கரை - பாக்கம் கிராமம், 
  	திருநின்றவூர் வழி, 
  	திருவள்ளூர் தாலுகா & மாவட்டம். Pin - 602 024.
  	தமிழ்நாடு, இந்தியா.
  
  >>	Contacts : 08015474263, 08939396625.
  	E-mail : srianandeeswar@gmail.com
  

  Back to thirupaNi page
  Back to Shaiva Siddhantha Home Page
  Back to Shaivam Home Page