தொண்டமான்நல்லூர் (தொண்டைமான்நல்லூர்) அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் உடனாய
அருள்மிகு ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Thondamannallur (Thondaimannallur) Sri Sivakami Ambal Udanaya Sri Chidambareswarar temple thiruppaNi
* * * * *

அமைவிடம் :

அருள்மிகு ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், தொண்டமான்நல்லூர் & அஞ்சல், குளத்தூர் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

சிறப்பு :

சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மிக பழமையான திருத்தலமாகும். மூர்த்தி - தலம் - தீர்த்தம் என்னும் சிறப்பு பெற்றது. இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினசரி அன்னதானம் வழங்க மிகப் பெரிய அன்னதான சத்திரம் உடைய பிரசித்தி பெற்ற சிவத்தலமாகும்.

திருப்பணி விபரம் :

இத்திருக்கோயில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இறைவன் திருவருளால் திருப்பணிகள் மற்றும் பூஜைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. பெரும்பாலான திருப்பணி வேலைகள் நிறைவுபெற்று, தற்போது சுற்றுச்சுவர் (Compound Wall) மற்றும் சுவாமி சன்னதி எதிரில் உள்ள நுழைவாயில் கோபுரம் மண்டபம் திருப்பணிகள் நடைபெற உள்ளன. விரைவில் திருப்பணிகள் நிறைவுற்று திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து சிவ புண்ணியம் ஈட்டி என்றும் மாறாத சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.

 
		இப்படிக்கு, 
	தொண்டமான்நல்லூர் - கீழப்பட்டி 
		பொது மக்கள். 

	திருப்பணி ஒருங்கிணைப்பு : 
	களமாவூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் உழவாரத் திருப்பணி குழு,
	வை. கந்தசாமி சிவனடியார்,
	Mob : 09360779163.

	மேலும் - ஆலய பணியில்
	அழகம்மாள் - தொண்டமான்நல்லூர்.
	Mob : 09791874377.

Back to thirupaNi page
Back to Important Events Page
Back to Shaivam Home Page