வேள்விமங்கலம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை சமேத
ஸ்ரீ கைலாசநாதர் சுவாமித் திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Velvimangalam Sri Kamakshi ambikai Sametha
Sri Kailasanathar temple (Thiruppani) Renovation
* * * * *


அமைவிடம்:

அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் சுவாமித் திருக்கோயில், வேள்விமங்கலம், குன்னம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

தல சிறப்பு:

சோழ நாட்டின் வடபகுதியில் இருக்கும் இத்தலம் மிகவும் பழைமை வாய்ந்ததாகும்; வியாக்ரபாதர் மற்றும் வசிட்ட மகரிஷி ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். நாள்தோறும் சதுர்வேதங்களை ஓதி வேள்விகள் செய்துவந்தமையால் இவ்வூர் "வேள்விமங்கலம்" என்று அழைக்கப்படுகிறது. வேள்விமங்கலம் சிவன் கோயிலுக்கு வேதம் ஓதவும், வேள்விகள் புரிந்திடவும், கங்கைநதி தீரத்தில் இருந்து வேத விற்பன்னர்கள் நானூறு பேரை அழைத்து வந்தனர்; அச்சமயம் திட்டக்குடி வசிஷ்டேசுவரர் நானும் ஒருவன் என்று கூறி அவர்களுடன் சேர்ந்தாராம். இதன்பொருட்டே இத்திருக்கோயிலுக்கு "நானூற்றொருவர் கோயில்" என்று பெயர் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இச்செய்தி தமிழ்தாத்தா உ.வே.சா. அவர்களின் தலபுராணத் தொகுப்பு நூலில் குறிக்கப்பட்டுள்ளது. சோழ மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் நிறைய இத்திருக்கோயிலில் உள்ளன.

திருப்பணி விபரம்:

மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ள இத்திருக்கோயிலை நல்மனம் கொண்ட அன்பர் பெருமக்களும், உள்ளூர் பெருமக்களும் கண்ணுற்று அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி, திருப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்; திருப்பணிகள் ஓரளவு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் இத்திருப்பணிகள் விரைவில் நிறைவடைவதற்கு இதைக் கண்ணுரும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து எல்லாம் வல்ல ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

	"கொற்றவாளீ சற்காலய விமானம் கோபுரமண்டபம்ஆதி 
	முற்றஆர்வத்திற் புரிந்தவர்புரிவோர் முனிவரும்விழாச்சிறப்பு எடுப்போர்சென்ற 
	செற்றபல் உபசாரங்களும் பரிவார்செய்பவர்பிற விரும்புனரும் 
	உற்றவர்கள் யாவராயினும்யாம் உண்மையிற் போற்றுதுமந்தே"
							- கோவிலூர் புராணம்.

நிலுவையில் உள்ள திருப்பணிகள்:

1. மூலவர் சன்னிதி மகா மண்டபம்

2. அம்பாள் சன்னிதி மகா மண்டபம்

3. திருக்கோயில் நுழைவு வாயில்

4. மடப்பள்ளி அமைத்தல்

5. சண்டிகேஸ்வரர் சன்னிதி விமானம் அமைத்தல்; செலவு சுமார் ரூ.60,000/-

6. திருக்கோயிலுக்கு மின்சாதனங்கள் மற்றும் குடிநீர் வசதி அமைத்தல்; செலவு சுமார் ரூ.65,000/-

7. நுழைவு வாயில் நிலைக்கதவு மரத்தினால் அமைத்தல்.

8. திருமுறைப் பாடல்களை கல்வெட்டில் அமைத்தல்.

9. நந்திகேஸ்வரர் மண்டப விமானம் அமைத்தல்; செலவு சுமார் ரூ.30,000/-

10. கோயில் வளாகத்தில் சிமெண்ட் தரை தளம் அமைத்தல்; செலவு சுமார் ரூ.1,00,000/-

11. கும்பாபிஷேக செலவு - சுமார் ரூ.6,00,000/-

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.		அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சேவா டிரஸ்ட்,
		பதிவு எண். : 331/2010, 
		வேள்விமங்கலம்.
		பெரம்பலூர் மாவட்டம் - 621 716.

அல்லது - 


	Arulmiku Kailasanathar Temple Seva Trust,
	A/C. No.1788101032852.
	Canara Bank, Agaramsigoor Branch.

அல்லது : - 

	A. Mullainathan,
	No.16, Annai Nagar 1st Street,
	Pukalur S.F. - P.O.,
	Karur District.	
		Pin - 639 113.

	Mob : 08428591265.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page