திருவிடைக்கோடு அருள்மிகு ஸ்ரீ சடையப்பர் சுவாமித் திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Thiruvidaikkodu Sri Chadayappar swamy temple (Renovation) Thiruppani
* * * * *


அமைவிடம்:

அருள்மிகு ஸ்ரீ சடையப்பர் சுவாமித் திருக்கோயில், திருவிடைக்கோடு, வில்லுக்குறி அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

தல சிறப்பு:

இத்திருக்கோயில் அறுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

திருப்பணி விபரம்:

சிவபெருமான் திருவருளால் கிராம பொது மக்கள் ஒன்று கூடி கொடிமரம், இராஜகோபுரம், கூரை, சுவர், தரை பராமரிப்பு மற்றும் திருக்கோயில் குளத்தை சுற்றி கல்படி பராமரிப்பு ஆகிய திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதைக் கண்ணுரும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து எல்லாம் வல்ல ஸ்ரீ சுந்தரேசுவரர் சுவாமி திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

சிவன் கோயில் திருப்பணிகளுக்கு உதவுபவர்கள், திருக்கோயிலை கட்டியவர்களைவிட நான்கு மடங்கு சிவ புண்ணியம் பெறுவார்கள் என்பது மாதவச் சிவஞான சுவாமிகளின் திருவாக்காகும்.


	"முரிந்து வீழ்ந்தன வெடித்தன உடைந்தன முதிய 
	நெரிந்தவாகிய கோபுரம் நெடுமதில் பிறவும்
	தெரிந்து முன்னையிற் சீர்பெறப் புதுக்குவோர் பண்டு 
	புரிந்து ளோர்பெறும் புண்ணியம் நான்மடங்கு உறுவர்"

						- காஞ்சிப்புராணம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.


ஸ்ரீமகாதேவர் சேவா சங்கம், ஸ்ரீசடையப்பர் பக்தர்கள் அறக்கட்டளை Ph : 04651 - 258210 திருவிடைக்கோடு, கன்னியாகுமரி மாவட்டம். அல்லது : - Sree Chadayappar Devotees Trust, A/c. No.57052346037, State Bank of Travancore; Villukury Branch. IFSC Code - SBTR0000371.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page