திருகானாட்டம்புலியூர் அ/மி ஸ்ரீ கோல்வளைக்கையம்மை உடனுறை அ/மி ஸ்ரீ பதஞ்சலீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Thirukanattampuliyur Sri Kolvalaikkaiyammai Udanurai Sri Padhanjaleeswarar swamy temple thiruppaNi (Renovation)
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ பதஞ்சலீஸ்வரர் சுவாமி திருக்கோயில், திருகானாட்டம்புலியூர் (திருக்கானாட்டுமுள்ளூர்), கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

தல சிறப்பு:

சோழ நாட்டில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள பல (பாடல்பெற்றத்) திருத்தலங்களுள் கானாட்டம்புலியூர் என்று அழைக்கப்படும் திருக்கானாட்டுமுள்ளூரும் ஒன்றாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்திருத்தலத்தை அடைந்தபோது அவருக்கு பெருமான் எதிர் காட்சி கொடுத்தருள, அத்திருக்காட்சியை கண்குளிரக் கண்ட சுந்தரர், வள்வாய மதிமிளிரும் என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளினார். இதில் சுந்தரர் இறைவனது செம்மையாகிய திருவடி மலர்களை கண்டு தொழுதேன் என்ற கருத்தினை புலப்படுத்தி இருப்பதுடன் இறைவனின் முழுமுதற் தன்மைகள் வெளிப்படும் வண்ணம் வானவர்கோன், பூதங்கள் ஐந்தாய் நின்றான், எண்குணத்தினான் என்று இன்னும் பலவாக இத்தல இறைவனை சிறப்பித்துப்பாடுகின்றார். சுந்தரர் அருளிய இத்திருப்பதிகத்தை சேக்கிழாரும் "வானாளும் திருப்பதிகம்" என்று வியந்து போன்றுகின்றார்.

இத்தலத்து இறைவனை பதஞ்சலி முனிவர் வழிபாடு செய்துள்ளார். சோழ மன்னர்கள் இத்திருக்கோயிலைப் புனரமைப்பு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

திருப்பணி விபரம்:

சிவத்தவச் சீலர்களை அங்கத்தினர்களாகக் கொண்டு "ஸ்ரீ பதஞ்சலீஸ்வரர் நற்பணி மன்றம்" என்ற அமைப்பை ஏற்படுத்தி திருக்கோயிலின் சிதிலமடைந்த பகுதிகளனைத்தையும் செப்பனிட்டு திருக்குடமுழுக்கு செய்ய திருவருளின்படி முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திருக்கோயில் திருப்பணிகள் விரைந்து நடைபெறவும், திருக்குடமுழுக்கு செம்மையாக நடைபெறவும் மெய்யன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து இறையருள் பெற வேண்டுகிறோம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


		தொடர்பு : -
				ஸ்ரீ பதஞ்சலீஸ்வரர் நற்பணி மன்றம்,
				சேமிப்பு கணக்கு எண்.936539200, 
				இந்தியன் வங்கி, 
				காட்டுமன்னார்கோயில் கிளை.

				Sri Padhanjaleeswarar Narpani Manram, 
				S.B. A/c. No.936539200, 
				INDIAN BANK,
				Kattumannarkoyil Branch.

		Phone :  	9382783542


Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page