திருவிற்குடி வீரட்டம்

இறைவர் திருப்பெயர்	: வீரட்டானேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: ஏலவார் குழலி, பரிமள நாயகி
தல மரம்		: துளசி
தீர்த்தம்			: சக்கரதீர்த்தம், சங்கு தீர்த்தம்
வழிபட்டோர்		: திருமால், சலந்தரனின் மனைவி பிருந்தை
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - வடிகொள் மேனியர் வானமா மதியினர். 
thiruvirkudi temple

தல வரலாறு

  • இறைவன், சலந்தரனைச் சங்கரித்த தலம்.

  • இறைவன் அருளால், சலந்தரனின் மனைவியைத் திருமால் துளசியாக ஏற்ற தலம். எனவே இத் தலமரம் துளசியாகும்.

சிறப்புக்கள்

  • திருமால் வழிபட்ட இலிங்கத் திருமேனி தனிக் கோவிலாக உள்ளது.

  • கோயில் கட்டுமலையில் இருக்கின்றது.
  • உற்சவ மூர்த்தி கையில் சக்கரத்துடன் உள்ளார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை-பேரளம் இரயில் பாதையில், விற்குடி இர்யில் நிலையத்திலிருந்து 2கீ.மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து பஸ் வசதி உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 73வது
தலம் திருப்பனையூர்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 75வது
தலம் திருப்புகலூர்