திருவிசயமங்கை (திருவிஜயமங்கை)

இறைவர் திருப்பெயர்		: விஜயநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: மங்களாம்பிகை - மங்கை நாயகி.
தல மரம்			: 
தீர்த்தம்				: அருச்சுன தீர்த்தம்.
வழிபட்டோர்			: அருச்சுனன்.
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் - மருவமர் குழலுமை. 
				  2. அப்பர்   - குசையும் அங்கையிற்.
Visayamangai temple

தல வரலாறு

  • அர்ச்சுனன் - விசயன் வழிபட்ட தலமாதலின், 'விசயமங்கை' எனப்படுகிறது.

சிறப்புக்கள்

  • மூலவர் சிவலிங்கத் திருமேனி - அருச்சுனன் அம்பு பட்ட தழும்பு - கோடு - சிவலிங்கத் திருமேனியில் கீற்று போல் உள்ளது.

தற்போதைய நிலை (தேவை)

  • மிகவும் பழமையான கோயில், பழுதடைந்த நிலையில் உள்ளது. கோயிலின் செங்கல் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. பராமரிப்பார் இலர். சுவாமி, அம்பாள் விமானங்களில் கலங்களும் சுதையாலேயே அமைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை பூசைமட்டுமே நடைபெறுகிறது. அதுவும் சிவாசாரியரின் சொந்த முயற்சியால் நடைபெறுகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவைகாவூரிலிருந்து ஆற்றோரமாக - (இடப்பால் திரும்பி)ச் செல்லும் கிளைப்பாதையில் 2 கி. மீ. சென்று இத்தலத்தை அடையலாம்.

See Also:
1. கோவந்த புத்தூர்

< PREV <
காவிரி வடகரை 46வது
தலம் திருப்புறம்பயம்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 48வது
தலம் திருவைகாவூர்