|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருவாழ்கொளிப்புத்தூர்
இறைவர் திருப்பெயர் : மாணிக்க வண்ணர், இரத்தினபுரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : வண்டமர் பூங்குழலி, பிரமகுந்தளாம்பாள்
தல மரம் : வாகை
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
வழிபட்டோர் : திருமால், அர்ச்சுனன், துர்க்கை, வண்டு, வாசுகி
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் ( பொடியுடை மார்பினர், 2.ச
¡கை ஆயிரமுடையார்),
சுந்தரர்(தலைக்கலன் தலைமேல்)
தல வரலாறு
- இறைவன் அர்ச்சுனனை ஆட்கொள்ளவேண்டி, அவன் தன் வாளாயுதத்தை ஒளித்துவைத்திருந்த இடத்தில் வாசுகியை ஏவி, அவ்வாளை ம¨
றக்கும்படிச் செய்தார். அர்ச்சுனன், அவ்வாள் வேண்டி இறைவனையும், வாசுகியையும் வழிபட்டு வாளைப்பெற்றான். வாசுகி இருந்த இடம் புற்றாதல
¡ல், இது வாளளிபுற்றூர் எனப்படுகிறது.
சிறப்புக்கள்
- துர்க்கைக்கு வழிபாடு இத் தலத்தில் சிறப்பாகும்.
- வாசுகிக்கு ஆண்டுதோறும் அபிஷேகம் நடைபெறுகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, இன்று திருவாளப்புத்தூர் எனப்படுகிறது. மயிலாடுதுறை-சிதம்பரம் இரயில்பாதையில், நீடூர் இரயில்நிலையத்திற்கு வடக்கே 9கீ.மீ தூரத்தில் உ
ள்ளது. மயிலாடுதுறை, மணல்மேடு ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.
|