|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருவாட்போக்கி (ஐயர்மலை, ரத்னகிரி, சிவாயமலை)
இறைவர் திருப்பெயர் : ரத்னகீரீசர், அரதனாசலேஸ்வரர், மாணிக்கஈசர், முடித்தழும்பர்.
இறைவியார் திருப்பெயர் : சுரும்பார்குழலி.
தல மரம் :
தீர்த்தம் : காவிரி.
வழிபட்டோர் : இந்திரன், சயந்தன், வாயு, ஆதிசேஷன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : அப்பர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- இரத்தினகிரி, மாணிக்கமலை, சிவாயமலை, அரதனசலம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும்.
- அகத்தியர் இங்குச் சுவாமியை நண்பகலில் தரிசித்து அருள் பெற்றமையால் இங்கு நண்பகல் தரிசனம் விசேஷம். இதனால் இவ்விறைவன்
மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார்.
- மூலவர் சுயம்பு மூர்த்தி. கோயில் மலைமேல் மிக உயரத்தில் உள்ளது. அழகாக அமைக்கப்பட்டுள்ள 1140 படிகளைக் கடந்து ஏறிச் செல்லவேண்டும்.
- சிவராத்திரி நாளில் அல்லது முன்பின் நாள்களில் சூரியஒளி, சுவாமிக்கு நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக வந்து சுவாமி மீது படுகிறது.
- சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர்த்தொட்டி உள்ளது.
- இப்பெருமானுக்கு நாடொறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது. (இன்றும் இப்பொறுப்பை
"பன்னிரண்டாம் செட்டியார் " என்னும் மரபினர் ஏற்றுக்கொண்டு, குருக்கள் மூலம் நடத்துவிக்கின்றனர்.)
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் இத்தலம் உள்ளது.
|