திருப்புறவார்பனங்காட்டூர்

		இறைவர் திருப்பெயர்	: பனங்காட்டீசர்
		இறைவியார் திருப்பெயர்	: புறவம்மை, சத்யாம்பிகை
		தல மரம்		: பனை
		தீர்த்தம்			: பத்ம தீர்த்தம்
		வழிபட்டோர்		: சூரியன், சிபிச்சக்கரவர்த்தி
		தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - விண்ணமர்ந்தன மும்மதில்.

thirupuravar_panangattur temple

தல வரலாறு

  • இது, பனை மரத்தைத் தலமரமாகக் கொண்டதாலும், சிபிச் சக்கரவர்த்தி (புறாவின் பொருட்டு தன் தசையை அரிந்தவர்) வழிபட்டதாலும்(புறவார்), இப் பெயர் பெற்றது.

  • சூரியன், பூசித்துப் பேறுபெற்றத் தலம்.

சிறப்புகள்

  • சித்திரை மாதம்,முதல் ஏழு நாட்களில், சூரியனுடைய கிரணங்கள் சுவாமியின் மீதும், அம்பிகையின் மீதும் பதிகின்றது.

  • சோழர் காலக் கல்வெட்டுகள் மூன்று படி எடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, விழுப்புரம் இரயில் நிலையத்திற்கு வடக்கேயுள்ள முண்டியம்பாக்கம் இரயில் நிலையத்திற்கு வடகிழக்கே 2-கி. மீ. தூரத்தில் உள்ளது. விழுப்புரம் - பாண்டிச்சேரி (திருக்கனூர் - வழி) செல்லும் பஸ்களில் இக்கோவிலை அடையலாம். பனையபுரம் என வழங்கப்படுகின்றது.

தொடர்பு :

  • 09942056781

< PREV <
நடு நாட்டு 19வது தலம்
திருமுண்டீச்சுரம்
Table of Contents > NEXT >
நடு நாட்டு 21வது
தலம் திருஆமாத்தூர்