திருப்புனவாயில் (திருப்புனவாசல்)

இறைவர் திருப்பெயர்		: விருத்தபுரீஸ்வரர், பழம்பதிநாதர், மகாலிங்கேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: பிருகந்நாயகி, பெரியநாயகி.
தல மரம்			: சதுரக்கள்ளி, குருந்து, மகிழம், புன்னை.
தீர்த்தம்				: இந்திர, பிரம்ம, சக்கர, சூரிய, இலக்குமி, சந்திர, 
				 பாம்பாறு, வருண, கல்யாண, 
				 சிவகங்கை ஆகிய பத்து தீர்த்தங்கள்.
வழிபட்டோர்			: வேதங்கள், திருமால், பிரமன், இந்திரன், சூரியசந்திரர், 
				 எமன், ஐராவதம், வசிட்டர், அகத்தியர், சௌந்தரபாண்டியன்.
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் - 	மின்னியல் செஞ்சடை.
				 2. சுந்தரர் -	சித்தம் நீநினை என்னொடு.
Tiruppunavayil temple

தல வரலாறு

 • இந்திரன் வழிபட்ட விநாயகர் "ஆகண்டல விநாயகர்" தனியே உள்ளார்.

 • மொட்டைக்கோபுர வாயிலில் குடவறையில் காளி எழுந்தருளியிருப்பதால், அத்தெய்வம் மிக உக்கரத்தில் இருப்பதன்பொருட்டு இக்கதவு எப்போதும் மூடப்பட்டுள்ளது.

 • இத்தல புராணம் திருவாரூர் தியாகராஜ கவிராயரால் பாடப்பட்டுள்ளது.

 • பாண்டிய மன்னர்களின் காலத்திய கட்வெட்டுக்கள் ஐந்து இத்தலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுக்கல் இறைவனை "திருப்புனவாசலுடைய நாயனார்" என்று குறிப்பிடுகின்றன.

Tiruppunavayil temple vimAnam

சிறப்புகள்

 • விருத்தபதி, விருத்தகாசி, இந்திரபுரம், பிரமபுரம், வச்சிரவனம், கைவல்யஞானபுரம், தட்சிணசிதம்பரம் என்பன வேறு பெயர்கள்.

 • தஞ்சை பிரகதீஸ்வரருக்கு அடுத்தபடி பெரிதாக உள்ள இலிங்க மூர்த்தி இதுவாகும். உயரம் 9 அடி, சுற்றளவு 8 1/2 அடி, ஆவுடையார் சுற்றளவு 33 அடி, கோமுகி 3 1/2 அடி நீளம்.

 • இதனையொட்டி, 'மூன்று முழமும் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று' என்ற பழமொழி வழங்குகிறது.

 • மகாமண்டபத்தில் தென்பால் சோமாஸ்கந்தர், நால்வர், சேக்கிழார் ஆகியோர் காட்சி தருகின்றார்கள்.

 • ஐந்து விநாயகர், சதுர்முகலிங்கம், கபிலபுத்திரர், ஒன்பதின்மர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன.

  The (Square) Cactus (Sadhurakkalli) is one of the Sthala vruksha of Thiruppunavayil temple.

  The Poon tree (Punnai) is one of the Sthala vruksha of Thiruppunavayil temple.

 • கோஷ்ட மூர்த்தமாகப் பொதுவாக ஆலயங்களில் இடம் பெறும் இலிங்கோற்பவருக்குப் பதிலாக இங்கு திருமாலும் அநுமனும் உள்ளனர்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், திருவாடானை முதலிய ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன.

தொடர்பு :

 • 04371 - 239212

< PREV <
பாண்டி நாட்டு 6வது
தலம் திருப்புத்தூர்
Table of Contents > NEXT >
பாண்டி நாட்டு 8வது
தலம் இராமேச்சரம்