|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருப்பழுவூர்
இறைவர் திருப்பெயர் : வட மூலநாதர்(வடம்-ஆலமரம்), யோகவனேஸ்வரர்,ஆலந்துறையார்
இறைவியார் திருப்பெயர் : அருந்தவ நாயகி
தல மரம் : ஆல மரம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
வழிபட்டோர் :அம்பிகை, பரசுராமர்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் ( முத்தன் மிகுமூவிலை)
தல வரலாறு
- ஆலமரத்தைத் தலமரமாகக் கொண்டமையால்,இப் பெயர்(பழு-ஆலமரம்) .
- அம்பிகை தவம் செய்ததால்,யோகவனம் என்றும் பெயர்.
- பரசுராமர்,தன் தாயைக் கொன்ற பழி தீரும் பொருட்டு,பூஜித்த தலம்.
சிறப்புக்கள்
- இவ் வூர்,மேலப் பழுவூர், கீழப்பழுவூர் என இரு பகுதிகளைக் கொண்டது.இது,கீழப் பழுவூராகும்.மேலப் பழுவூர்,மறவனீச்சரம் என்னும் கோவிலைக் கொண்டது..
- சோழர் காலக் கல்வெட்டுகள் 23 படி எடுக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது,திருவையாற்றிலிருந்து,அரியலூர் செல்லும் பஸ் பாதையில் இத் தலம் உள்ளது.திருவையாறு,அரியலூர் ஆகிய இடங்களிருந்து, பஸ் வசதி உள்ளது...
|