|
Home > Temples of India > pADal peRRa sthalam
பட்டீச்சரம்
இறைவர் திருப்பெயர் : பட்டீச்சுரர், தேனுபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : ஞானாம்பிகை, பல்வளை நாயகி.
தல மரம் : வன்னி.
தீர்த்தம் : ஞான தீர்த்தம். (கோடி தீர்த்தம்)
வழிபட்டோர் : மார்க்கண்டேயர்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- இங்கு தலவிநாயகராக அனுக்ஞை விநாயகர், மதவாரணப்பிளையார் உள்ளார்.
- ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தர் அருளிய சிறப்புடைய தலம்.
- இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன; அனைத்தும் சந்நிதியிலிருந்து விலகியே உள்ளன.
- விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற்றது இத்தலத்தில் தான்.
- இங்குள்ள துர்க்கை சோழர் காலப் பிரதிஷ்டை.
- ஆனித் திங்கள் முதல் நாளில் ஞானசம்பந்தர் முத்துப்பந்தர் பெற்ற திருவிழா நடைபெறுகிறது.
- இத்தலபுராணம் சமஸ்கிருதத்தில் உள்ளது. இது தமிழில் உரைநடையில் பட்டீஸ்வரர் மான்மியம் எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - ஆவூர் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். (சத்திமுற்றமும் பட்டீச்சரமும் அருகருகேயுள்ள தலங்கள் - இடையில் வீதிதான் உள்ளது.)
|