|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருப்பல்லவனீச்சுரம் (காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார்)
இறைவர் திருப்பெயர் : பல்லவனேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : சௌந்தர நாயகி.
தல மரம் : மல்லிகை, புன்னை
(தற்போதில்லை)
தீர்த்தம் : காவிரி.
வழிபட்டோர் : அகத்தியர், பல்லவ
மன்னன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்
தல வரலாறு
சிறப்புக்கள்
பட்டினத்தார், இயற்பகை நாயனார் ஆகியோரின் அவதாரப் பதி.
- சிலப்பதிகாரக் காப்பியம் தொடங்குவது இத்தலத்தில்தான்.
- வெளிமண்டபத்தில் தலப்பதிக கல்வெட்டு உள்ளது.
-
மாறவர்மன்திருபுவனச் சக்ரவர்த்தி சுந்தரபாண்டியனது 17-ஆம் ஆட்சியாண்டில் இராஜாதி ராஜ வளநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்துக் கோயிலுக்கு நிலம் வழங்கியதையும் மற்றும் சாலி வாகனசகம்.
கலி 4775 சகம் 1670 (கி. பி. 1757) ஜய வருடம் ராயரவுத்த மிண்ட நாயனார் முதலியோர் திருச்சாய்க்காட்டுச்சீனம், காவிரிப்பூம்பட்டினம் மாகாணம் பல்லவனீச்சரக் கோயிலுக்குத் திருப்பணிக்கும்
வழிபாட்டிற்கும் நிலம் வழங்கிய செய்தியை இங்குள்ள இரு வெவ்வேறு கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
- உள் மண்டபத்தில் தில்லையமைப்பில் அமைந்துள்ள சபாபதி சபை தரிசிக்கத்தக்கது.
- ஆடி மாதத்தில் பட்டினத்தாருக்கு பன்னிரு நாள்கள் திருவிழா எடுக்கிறார்கள்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
பூம்புகாருக்குள் நுழையும்போது, எல்லையில் உள்ள 'கண்ணகி வளைவை'த் தாண்டியதும் கோயில் உள்ளது. சீர்காழி, சிதம்பரம், திருச்சாய்க்காடு, மயிலாடுதுறை இவ்விடங்களிலிருந்து பேருந்துகள் உள்ளன.
|