திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்)

இறைவர் திருப்பெயர்		: நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: பாலாம்பிகை.
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: சரசுவதி, காமதேனு, கௌதமமுனிவர் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர், அப்பர்.
Neyttanam temple

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் தில்லைஸ்தானம் என்று வழங்கப்படுகிறது.

  • சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று.

சிறப்புக்கள்

  • இங்கு இறைவனுக்கு பசு நெய் அபிஷேகம் விசேஷமானது.
  • அம்பிகையின் திருப்பெயர் தேவாரப் பதிகத்துள் இளமங்கையம்மை என்றும் குறிக்கப்படுகிறது.
  • கல்வெட்டுக்களில் இத்தலம் "இராஜராஜ வளநாட்டு பைங்காநாட்டு திருநெய்த்தானம்" என்றும்; சுவாமியின் பெயர் நெய்த்தானமுடையார் என்றும் குறிக்கப்படுகிறது.
  • இக்கல்வெட்டுக்களிலிருந்து, நிபந்தமாக நிலங்கள் அளித்தமை, விளக்கெரிக்கப் பொற்காசுகள் தந்தமை, ஊர்ச்சபையதார் ஸ்தபன மண்டபம் கட்டியது, கோயிற் பணியாளர்களுக்கு நிலங்கள் அளித்தமை, சுவாமியின் நைவேத்தியத்திற்கு நிலங்கள் விட்டது முதலியன தெரியவருகிறது.
  • இலங்கையரசன் கயவாகு என்பவன் இப்பெருமானைத் தன் குலதெய்வமாகக் கொண்டு திருவிழாக்கள் செய்வித்த செய்தியும் கல்வெட்டால் தெரியவருகிறது.
  • இக்கோயிலில் பல்லவர்களும் திருப்பணி செய்துள்ளனர் என்பதற்குச் சான்றாக சிம்மத் தூண்கள் உள்ளதைக் காணலாம்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவையாற்றுக்கு மிக அருகாமையில் உள்ளது.

< PREV <
காவிரி வடகரை 51வது தலம்
திருவையாறு
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 53வது தலம்
பெரும்புலியூர்