|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருநாரையூர்
இறைவர் திருப்பெயர் : சௌந்தர நாதர்
இறைவியார் திருப்பெயர் : திரிபுர சுந்தரி
தல மரம் : புன்னாகம்
தீர்த்தம் : காருண்ய தீர்த்தம்
வழிபட்டோர் : நம்பியாண்டார் நம்பி, நாரை
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் (1. உரையினில் வந்தபாவம், 2.காம்பினை வென்ற,
3.கடலிடை வெங்கடு),
அப்பர் (1. வீறு தானுடை வெற்பன், 2.சொல்லானைப் பொருளானை)
தல வரலாறு
- நாரை பூஜித்ததால், இப் பெயர்.
- தேவாரத் திருமுறைகள் தில்லை கனகசபையின் ஒரு அறையில் இருந்ததை நம்பியாண்டார் நம்பி மூலமாக வெளிப்படுத்திய பொல்லாப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் தலம்.
சிறப்புக்கள்
- நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த தலம்.
- பொல்லாப் பிள்ளையார் சன்னதி மிகச் சிறப்பு.(பொள்ளா என்பது பொல்லா என்றாயிற்று. பொள்ளா என்பது உளி முதலியவற்றால் செய்யப்படாதது. சுயம்பு மூர்த்தி.)
- கி.பி.11ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட கல்வெட்டுகள் நான்கு உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோவில் செல்லும் பஸ் பாதையில் 5கீ.மீ தூரத்தில் இருக்கிறது. சிதம்பரத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.
|