திருநல்லூர்

இறைவர் திருப்பெயர்	: கல்யாணசுந்தரேஸ்வரர், பஞ்ச வர்ணேஸ்வரர், பெரியாண்டேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: கல்யாண சுந்தரி, திரிபுரசுந்தரி, பர்வத சுந்தரி
தல மரம்		: வில்வம்
தீர்த்தம்			: சப்தசாகர தீர்த்தம்
வழிபட்டோர்		: அகத்தியர், பிருங்கி முனிவர், வாயு
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் (1. கொட்டும் பறைசீராற், 2.பெண்ணமருந் திருமேனி, 
				3.வண்டிரிய விண்டமலர்)
                                     அப்பர் (1. அட்டுமின் இல்பலி யென்றன், 2.நினைந்துருகும் அடியாரை)
thirunallurp perumanam temple

தல வரலாறு

  • கயிலை மலையிலிருந்து வாயுவால் ஏவப்பட்ட இரு சிகரங்களில் ஒன்று இத் தலம். (மற்றது ஆவூர்). இச்சிகரத்தில் இறைவன் எழுந்தருளியுள்ளார்.இது சுந்தரகிரி எனப்படுகிறது.
  • திருநாவுக்கரசருக்கு ஈசன் திருவடி சூட்டியத் திருத்தலம்.
  • பிருங்கி முனிவர் வண்டு வடிவம் தாங்கி, வழிபட்டது.
  • அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலக் காட்சி வழங்கியது.

சிறப்புக்கள்

  • அமர் நீதி நாயனாரும், அவரது குடும்பத்தாருக்கும் முக்தியளித்த தலம். அவர் இருவரின் பிரதிமைகள், கற்சிலையிலும், செப்புச் சிலையிலும் உள்ளன..
  • இறைவரின் இலிங்கத் திருமேனி நாள்தோறும் ஐந்துமுறை நிறம் மாறும் தன்மையுடையது.
  • கோட்செங்கணாரின் மாடக் கோவில்.
  • சோழர் கால கல்வெட்டுகள் 22ம், முஹாய்சரர் கல்வெட்டு ஒன்றும் ஆக 23 கல்வெட்டுகள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, கும்பகோணம்-தஞ்சை இரயில்பாதையில் சுந்தரப்பெருமாள் இரயில்நிலையத்திலிருந்து தெற்கே 3கீ.மீ. தூரத்தில் உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 19வது தலம்
திருப்பாலைத்துறை
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 21வது தலம்
ஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்)