|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருநல்லம் (கோனேரிராஜபுரம்)
இறைவர் திருப்பெயர் : உமாமகேஸ்வரர், பூமீஸ்வரர், பூமிநாதர்.
இறைவியார் திருப்பெயர் : தேகசௌந்தரி, அங்கவளநாயகி.
தல மரம் : அரசு
தீர்த்தம் : பிரம தீர்த்தம்.
வழிபட்டோர் :
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர், அப்பர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- கண்டராதித்த சோழன் மனைவியான செம்பியன் மாதேவியின் திருப்பணிப் பெற்ற தலம்.
- கல்வெட்டில் இறைவன் 'திருநல்லம் உடையார் ' என்று குறிக்கப்படுகிறார்.
- இங்குள்ள கல்வெட்டுக்கள் இராசராசன், இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் காலத்தியவை.
- வேங்கிபுரம் முதலிப்பிள்ளை என்பவன் நன்கொடையால் கோயில் கட்டப்பட்டதாகவும், 'நக்கன் நல்லத் தடிகள்' என்பவனால் சண்டேசுவரர் உற்சவத் திருமேனி
செய்து தரப்பட்டது என்றும், குந்தவை பல நன்கொடைகளைக் கோயிலுக்குத் தந்துள்ளாள் என்றும் பல செய்திகள் கல்வெட்டு வாயிலாக தெரிய வருகின்றன.
- தலபுராணம் சமஸ்கிருதத்தில் உள்ளது.
- காரணாகம முறைப்படி பூசைகள் நடைபெறுகின்றன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - வடமட்டம், ஆடுதுறை - வடமட்டம் செல்லும் பேருந்துகளில் சென்று கோனேரிராஜபுரம் கூட்ரோடில் இறங்கி 1 கி. மீ. சென்றால் ஊரை அடையலாம்.
|