|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருநாகேச்சுரம் (திருநாகேஸ்வரம்)
இறைவர் திருப்பெயர் : நாகேஸ்வரர், நாகநாதர், சண்பகாரண்யேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : கிரிகுஜாம்பிகை, குன்றமாமுலையம்மை.
தல விநாயகர் : சண்பக விநாயகர்.
தல மரம் : சண்பகம்.
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்.
வழிபட்டோர் : ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்), கௌதமர்,
நந்தி, நளன், பராசரர், பகீரதன்முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : மூவர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- சேக்கிழார் திருப்பணி செய்த பெருமையுடையது. அவர் மிகவும் நேசித்த தலம். இதனால் தம் ஊரான குன்றத்தூரில் இப்பெயரில் ஒரு கோயிலைக் கட்டினார்.
- இத்தலம் ராகு கிரகத்திற்குரிய தலமாதலின், இப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாகிவிடுகிறது.
- தலவிநாயகர் - சண்பக விநாயகர் எனப்படுகிறார்.
- இக்கோயிலுக்கு சண்பகவனம், கிரிகின்னிகைவனம் என்பன வேறு பெயர்கள்.
- காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம், நண்பகலில் திருநாகேச்சுரம், மாலையில் திரும்பாம்புரம் என்று ஒரே நாளில் வழிபடுவது விசேஷம் என்பர்.
- சேக்கிழார், அவர் தாயார், தம்பி உருவங்கள் கோயிலில் உள்ளன.
- கண்டராதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாக சொல்லப்படுகிறது.
- இக்கோயிலில் 16 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன; இவை கண்டராதித்த, இராஜராஜன், இராஜேந்திர சோழர் காலத்தியவையாகும்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணத்திற்கு பக்கத்தில் உள்ளது. நகரப் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன.
|