திருமுருகன்பூண்டி

 
இறைவர் திருப்பெயர்		: முருகநாதேஸ்வரர், முருகநாதசுவாமி. 
இறைவியார் திருப்பெயர்		: ஆலிங்கபூஷணஸ்தனாம்பிகை (முயங்குபூண்முலையம்மை), 
				 ஆவுடைநாயகி, மங்களாம்பிகை. 
தல மரம்			: வில்வம். 
தீர்த்தம்				: பிரமதீர்த்தம், ஞானதீர்த்தம், சுப்பிரமணியதீர்த்தம்.
வழிபட்டோர்			: முருகப்பெருமான், அகத்தியர், மார்க்கண்டேயர், 
				 துர்வாசர் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள்		: சுந்தரர் - கொடுகு வெஞ்சிலை.
Tirumuruganpundi temple

தல வரலாறு

 • துர்வாசர் கற்பக உலகிலிருந்து மாதவி மர (குருக்கத்தி மர)த்தை இங்கு கொண்டு வந்தார் என்பர்; ஆதலால் இதற்கு மாதவிவனம் என்றும் பெயர்.

 • சுந்தரர் இவ்வழியே செல்லும்போது, இறைவன் தன் பூதகணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக் கொண்ட தலம்.

 • வழிமறித்து நிதிபறித்த இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டுச் சுந்தரருக்குக் காட்டிய (வேடுபறி நடந்த இடம்) 'கூப்பிடுவிநாயகர்' அவிநாசிக்கு போகும் வழியில் 1 கி.மீ. தொலைவில் பாறைமேல் உள்ளார்.

 • இத்தலம் பிரமகத்தி தோஷம் நீங்கிய தலம்.

சிறப்புகள்

 • சுவாமியும் அம்பாளும் மேற்கு பார்த்த சந்நிதிகள்; மூலவர் அம்பாள் பீடத்தின் கோமுகம் வடக்கு நோக்கி உள்ளது.

 • பதினாறுகால் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் வலப்பால் வேடுவர் உருவமும் சுந்தரர் உருவங்கள் இரண்டும் (ஒன்று பறிகொடுத்து முகம் வாடிய நிலையிலும், மற்றொன்று மீண்டும் பெற்ற மகிழ்ச்சி நிலையிலும்) உள்ளன. Full view of temple

 • சித்தபிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்கு வந்து தங்கியிருந்து நீராடி வழிபடுவதை இன்றும் காணலாம்.

 • பிரமதாண்டவ நடராசர் சந்நிதிக்கு சற்று தொலைவில் மாலாதரன் எனும் வேட மன்னன் வழிபட்ட மாதவனேஸ்வரர் கோயில் உள்ளது; நல்ல கல் கட்டிடம்.

 • எங்கும் இல்லாத புதுமையாக கோயிலின் முன் மண்டபத்தின் மேல், பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டுள்ளது.

 • இத்தலத்திற்கு செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் பாடிய தலபுராணம் உள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
அவிநாசியிலிருந்து 5-கி. மீ. தொலைவில் உள்ளது. பேருந்து வசதிகள் நிறைய உள்ளது.

தொடர்பு :

 • 04296 - 273507

< PREV <
கொங்கு நாட்டு 1வது தலம்
திருப்புக்கொளியூர் (அவிநாசி)
Table of Contents > NEXT >
கொங்கு நாட்டு 3வது
தலம் திருநணா (பவானி)