|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருமூக்கீச்சரம் - (உறையூர்)
இறைவர் திருப்பெயர் : பஞ்சவர்ணேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : காந்திமதியம்மை
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : சிவ தீர்த்தம், நாக தீர்த்தம்
வழிபட்டோர் : பிரமன், உதங்க முனிவர், கார்கோடகன்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் ( சாந்தம் வெண்ணீறெனப்பூசி),
தல வரலாறு
- உதங்க முனிவருக்கு, ஈசன், ஐந்து காலங்களில் ஐந்து நிறங்களில் காட்சி நல்கியத் தலம்.
- வேதச் சுருதி என்ற அந்தணன் பூஜித்து, பேயுருவம் நீங்கப் பெற்றான்.
- வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது யானையைக் கோழி வென்றமையால் இத் தலத்திற்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு.
சிறப்புக்கள்
- இது புகழ்ச்சோழ நாயனார் அவதரித்த திருப்பதி.
- தமிழ்நாட்டு மூவேந்தரும் சேர்ந்து வழிபட்ட பதி.
- சோழர் காலக் கல்வெட்டுகள் ஒன்பது படி எடுக்கப்பட்டுள்ளன.
- கோச்செங்கணாரின் மாடக்கோவிலாகும்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, இன்று உறையூர் என்று வழங்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் ஒரு பகுதியாகும்.தமிழகத்தின் அனைத்து
நகரங்களிலிருந்தும் இரயில் மூலமாகவும், பஸ் மூலமாகவும் திருச்சி இணைக்கப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து இக் கோவில் 2கீ.மீ. தூரத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து டவுண்பஸ் வசதி வெகுவாக உள்ளது.
|