|
Home > Temples of India > pADal peRRa sthalam
மேலைத்திருக்காட்டுப்பள்ளி (திருக்காட்டுப்பள்ளி)
இறைவர் திருப்பெயர் : அக்னீஸ்வரர், தீயாடியப்பர்.
இறைவியார் திருப்பெயர் : சௌந்தரநாயகி, அழகம்மை.
தல மரம் : வன்னி, வில்வம்.
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம், காவிரி.
வழிபட்டோர் : அக்கினி, திருமால், பிரமன், சூரியன், பகீரதன், உறையூர் அரசி முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர், அப்பர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- இங்குள்ள அக்கினி தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம் வைகாசி விசாகம் முதலிய நாட்களில் நீராடி வழிபடுதல் சிறப்பென்பர்.
- இக்கோயிலிலுள்ள நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன.
- மூலவர் - சிவலிங்கத் திருமேனி. நான்கு படிகள் பூமியில் தாழ உள்ளார். படிகள் இறங்கி சுற்றி வலம் வரலாம்.
- முதல் ஆதித்திய சோழனின் காலத் திருப்பணியைப் பெற்ற கோயில்
- ( 'பள்ளி ' என்ற சொல்லைக் கொண்டு இவ்வூரில் ஒரு காலத்தில் சமணர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். அதற்கேற்ப 24-ஆவது தீர்த்தங்கரரின் சிலை
இத்தலத்தில் கிடைத்துள்ளதாம்.)
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருச்சி, தஞ்சை, திருக்கண்டியூர், திருவையாறு, கல்லணை முதலிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு பேருந்துகள் உள்ளன. திருவையாறு - கல்லணை
சாலையில் இத்திருக்காட்டுப்பள்ளி உள்ளது.
|