|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருக்குடவாயில் (குடவாசல்) கோயில் தலவரலாறு
Sthala puranam of Thirukkudavayil (Kudavasal) Temple
இறைவர் திருப்பெயர் : கோணேஸ்வரர், சூரியேஸ்வரர், ப்ருகநாதர்
இறைவியார் திருப்பெயர் : பெரிய நாயகி
தல மரம் : வாழை
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
வழிபட்டோர் : கருடன், சூரியன், தாலாப்பிய முனிவர்,
ப்ருகு முனிவர், திருண பிந்து முனிவர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - 1. திகழும் திருமாலொடு,
2. கலைவாழும் அங்கையீர்.
தல வரலாறு
திருணபிந்து முனிவருக்கு இறைவன் குடத்தின் வாயில் வெளிப்பட்டு, குஷ்ட நோயைத் தீர்த்தருளியதால், இப்பெயர் பெற்றது.
கருடன் பூசித்து, அமுதம் பெற்றுத் தானும், தன் தாயும் சாபம் நீங்கப் பெற்ற தலம். இதனால் திருமதிலின் மேல் கருடன் உருவங்கள் உள்ளன.
சிறப்புகள்
- கோச்செங்கணாரின் மாடக் கோயில்.
- அம்மன் கோயில் நிலமட்டத்தில். உள்ளது.
- சோழர்கால கல்வெட்டுகள் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணத்திலிருந்து தென் கிழக்கில் 15-கி. மீ. தூரத்தில் இருக்கிறது. திருவாரூர், கும்பகோணம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
|