திருக்கூடலையாற்றூர்

இறைவர் திருப்பெயர்		: நர்த்தனவல்லபேஸ்வரர், நெறிகாட்டுநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: பராசக்தி, ஞானசக்தி (புரிகுழல்நாயகி) (இரு அம்பாள் சந்நிதிகள்)
தல மரம்			: கல்லால மரம் - தற்போது இல்லை.
தீர்த்தம்				: சங்கமத்தீர்த்தம் (வெள்ளாறும் மணிமுத்தாறும் கூடும் இடம்)
வழிபட்டோர்			: 
தேவாரப் பாடல்கள்		: சுந்தரர் - வடிவுடை மழுவேந்தி.

Kudalaiyatrur temple

தல வரலாறு

 • மணிமுத்தாறும் வெள்ளாறும் கூடும் இடத்தில் உள்ள ஊராதலின் கூடலையாற்றூர் என்று பெயர் பெற்றது.

 • வெள்ளப்பெருக்கில் இக்கோயில் அழிய, அங்கிருந்த கற்களைக் கொண்டு வந்து, இவ்வூரில் கோயிலைக்கட்டி சுவாமி அம்பாளை எழுந்தருளச்செய்துள்ளனர். இக்கோயில் நூறாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதென்பர்.

 • சுந்தரர் திருமுதுகுன்றம் சென்றபோது, இத்தலத்தை வணங்காமற் செல்ல, இறைவன் அந்தணராக வந்து, முன்செல்ல; சுந்தரர் அவரைத் திருமுதுகுன்றத்திற்கு வழியாதெனக் கேட்க, 'கூடலையாற்றூருக்கு வழி இஃது ' என்று கூறி மறைய, திடுக்கிட்ட சுந்தரர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டார் என்பது வரலாறு.

 • பிரமனுக்கு நர்த்தனம் செய்து காட்டியவராதலின் இறைவன் நர்த்தனவல்லபேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

சிறப்புக்கள்

 • கொடிமரம், பலிபீடம் இல்லை.

 • மூலவர் விமானம் இரு தள அமைப்புடையது.

 • இங்குள்ள உற்சவ மூர்த்தங்களுள் சிறப்பானது - சித்ரகுப்தர் ஒரு கையில் எழுத்தாணியுடன் மறுகையில் ஏடும் கொண்டு காட்சித் தருவது. (இம்மூர்த்தம் பிற்காலத்தில் பிரார்த்தனையாக ஒருவரால் செய்து வைக்கப்பட்டதாகும்.)

 • இக்கோயிலில் நவக்கிரக சந்நிதியில்லை.

 • இரு அம்பாள் சந்நிதிகளில் - பராசக்தி அம்பாள் சந்நிதியில் திருநீறும், ஞானசக்தி அம்பாள் சந்நிதியில் குங்குமமும் தரப்படுகிறது.

 • மதிலின் வெளிப்புறத்தில் அகத்தியர் சிற்பம் உள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சிதம்பரம் - காவாலகுடி நகரப் பேருந்து உள்ளது. சேத்தியாதோப்பு - கும்பகோணம் பாதையில் 'குமாரகுடி' வந்து, ஸ்ரீ முஷ்ணம் போகும் பாதையில் பிரிந்து 2-கி. மீ. சென்று, 'காவாலகுடி' சாலையில் திரும்பி, 2-கி. மீ. சென்று 'காவாலகுடி'யை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம்.

தொடர்பு :

 • 04144 - 208704

< PREV <
நடு நாட்டு 2வது தலம்
திருத்தூங்கானைமாடம்
Table of Contents > NEXT >
நடு நாட்டு 4வது தலம்
திருஎருக்கத்தம்புலியூர்
(இராசேந்திரப்பட்டிணம்)