|
Home > Temples of India > pADal peRRa sthalam
கொட்டையூர்
இறைவர் திருப்பெயர் : கோடீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : கந்துக கிரீடாம்பாள், பந்தாடுநாயகி.
தல மரம் : கொட்டை (ஆமணக்கு)ச் செடி.
தீர்த்தம் : அமுததீர்த்தம்.
வழிபட்டோர் : மார்க்கண்டேயர்.
தேவாரப் பாடல்கள் : அப்பர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- இத்தலத்தின் வேறு பெயர்கள் வில்வாரண்யம், ஏரண்டபுரம் என்பனவாம்.
- மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - காய்காய்த்த மாதிரி காணப்படுகிறது.
- இத்தலத்தில் புண்ணியஞ் செய்தாலும், பாவஞ் செய்தாலும் கோடி மடங்காகப் பெருகும் என்பது ஐதீகம். இங்குப் பாவஞ் செய்தால் கோடி மடங்காகப் பெருகுவதால்
அதற்குக் கழுவாயே இல்லாமற் போகும் என்பதை "கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே" என்னும் பழமொழியால் அறியலாம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - திருவையாறு சாலையில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து 4 கி. மீ. தொலைவு; நகரப் பேருந்து செல்கிறது. கும்பகோணம் - சுவாமிமலை நகரப்
பேருந்து கொட்டையூர் வழியாகச் செல்கிறது.
|