திருக்கொண்டீச்சரம் (திருக்கண்டீஸ்வரம்)

இறைவர் திருப்பெயர்		: பசுபதீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: சாந்தநாயகி.
தல மரம்			: வில்வம், இலவம்.
தீர்த்தம்				: க்ஷீரபுஷ்கரணி
வழிபட்டோர்			: காமதேனு.
தேவாரப் பாடல்கள்		: அப்பர்	 - 1. வரைகிலேன் புலன்க ளைந்தும், 
					   2. கண்ட பேச்சினிற் காளையர்.
kondicharam temple

தல வரலாறு

  • தற்போது மக்களால் திருக்கண்டீஸ்வரம் என்று வழங்கப்படுகிறது.

  • உமை, பசுவின் வடிவில், தன்கொம்பால் பூமியைக் கிளறியவாறே இறைவனைத் தேடிவந்தபோது, கொம்புப்பட்டுக் குருதி பெருகி இறைவன் வெளிப்பட்டார். உமை (பசு) தன் பாலையே பெருமான்மீது (சிவலிங்க மூர்த்தம்) சொரிந்து புண்ணை ஆற்றினாள் என்பது வரலாறு. மூலத்திருமேனியின் மீது வெட்டுப்பட்டது போன்ற - பசுவின் கொம்பு பதிந்த ஆழமான வடு உள்ளது.

சிறப்புக்கள்

  • வெளவால் நெத்தி மண்டபத்தில் ஆபத்சகாய மகரிஷி உருவமும்; ஒருபுறத்தில் மூன்று திருவடிகளுடன் கூடிய ஜ்வரஹரேசன் உருவமுமுள்ளது.

  • சுரநோயால் வாடுபவர்கள் இம்மூர்த்திக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து, புழுங்கலரிசி நிவேதனம் செய்தால் சுரம் நீங்குவது இன்றும் கண்கண்ட பிரார்த்தனையாக உள்ளது.

  • கார்த்திகை வியாழன் எமகண்டத்தில் ஒவ்வொரு வருடமும் விழா எடுக்கப்பட்டு தீர்த்தவாரி நடைபெருகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
நாகப்பட்டினம் - நன்னிலம்; மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி - வழி நன்னிலம்; நாகப்பட்டினம் - கும்பகோணம் - வழி நன்னிலம் முதலிய பாதைகளில் நன்னிலத்துக்குள் நுழைவதற்கு முன்னால் "தூத்துகுடி Stopping" என்னுமிடத்தில் பிரியும் பாதையில் உள்ளே சென்றால் வெகு அருகாமையில் கோயிலையடையலாம்.

< PREV <
காவிரி தென்கரை 71வது
தலம் திருநன்னிலம்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 73வது
தலம் திருப்பனையூர்