|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருக்கோளிலி (திருக்குவளை) திருக்கோயில் தலவரலாறு
Sthala puranam of Thirukkolili (Thirukkuvalai) Temple
இறைவர் திருப்பெயர் : பிரமபுரீசுவரர், கோளிலிநாதர், கோளிலிநாதேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : வண்டமர் பூங்குழலி.
தல மரம் : தேற்றாமரம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்.
வழிபட்டோர் : பிரமன், திருமால், இந்திரன், அகத்தியர், முசுகுந்தன்,
பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், ஹேமகாந்த
மன்னன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. நாளாய போகாமே நஞ்சணியுங்.
2. அப்பர் - 1. மைக்கொள் கண்ணுமை,
2. முன்ன மேநினை யாதொழிந்.
3. சுந்தரர் - 1. நீள நினைந்தடி யேனுமை.
தல வரலாறு
இத்தலம் மக்கள் வழக்கில் "திருக்குவளை" என்று வழங்கப்படுகிறது.
நவக்கிரகங்கள் முதலியோர்க்கு உண்டாய குற்றங்களை நீக்கி அருள் புரிந்தமையால் "கோளிலி" என்று பெயர் பெற்றது. "கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்" என்பது ஞானசம்பந்தர் வாக்கு.
பகாசூரனைக் கொன்றதனால் உண்டான பாவத்தை (பிரமகத்தித் தோஷம்) வீமன் இங்குப் போக்கிக் கொண்டான் என்பது வரலாறு.
சிறப்புகள்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் நெல்மலையை எடுத்துச் செல்ல ஆள்வேண்டிப் பாடிய சிறப்புக்குரியதாய் விளங்குவது இத்தலம்.
- இத்தலம் சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. (அவனி விடங்கத்தலம், பிருங்கநடனம்)
இத்தலத்திற்கு பிரமதபோவனம், கதகாரண்யம் (தேற்றாமரவனம்), புஷ்பவனம், தென்கயிலை எனப்பல பெயர்களுண்டு.
- முன்கோபுரத்தில் பகாசூரன் உருவமும், பிரமகத்தி உருவமும் உள்ளது.
- சுவாமி, அம்பாள் சந்நிதிக்கு நடுவில் அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.
- இறைவன் வெண் மணலால் ஆன சிவமூர்த்தமாக காட்சி தருகிறார்.
- இங்குள்ள நவக்கிரகங்கள் ஒருமுகமாகத் தென்திசையை நோக்கி விளங்குகின்றன.
ஆலயத்திற்கு தென்மேற்கு மூலையில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்குச் சிவலோகம் காட்டியவர்) உள்ளார்.
- இக்கோயிலில் 19 கல்வெட்டுக்கள் - சோழர், பாண்டியர் காலத்தியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டுக்களில் இறைவன் 'திருக்கோளிலி உடைய நாயனார் ' என்றும், தியாகேசர் 'அவனிவிடங்கத் தியாகர் ' என்றும் குறிக்கப்படுகிறார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - எட்டிக்குடி சாலையில் எட்டிக்குடிக்கு முன்னால் உள்ள தலம்; திருவாரூரிலிருந்து 19-கி. மீ. தொலைவில் உள்ளது. திருவாரூரிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது.
|