|
Home > Temples of India > Padal Perra Thalangal Home > Temples of India
திருக்கோடிகா - (திருக்கோடிகாவல்)
இறைவர் திருப்பெயர் : கோடீஸ்வரர், கோடிநாதர்
இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி,வடிவாம்பிகை
தல மரம் :
தீர்த்தம் : சிருங்க திர்த்தம்
வழிபட்டோர் : மூன்று கோடி ரிஷிகள்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்(இன்று நன்று),
அப்பர்(1. நெற்றிமேற் கண்ணினானே, 2.சங்குலாமுன்கைத், 3.கண்டலஞ்சேர்)
தல வரலாறு
- மக்கள் வழக்கில் தற்போது திருக்கோடிகாவல் என்று வழங்குகிறது.
- மூன்று கோடி ரிஷிகள் பூஜித்ததால் இப்பெயர் பெற்றது.
சிறப்புக்கள்
- இக்கோவில், திருவிசைப்பாப்பதிகம் பாடிய கண்டராதித்த சோழரது மனைவியாகிய செம்பியன்மாதேவியாரால் கற்றளியாக ஆக்கப் பெற்றது.
- பல்லவர்கள், முத்தரையர்கள், பாண்டியர்கள், சோழர்கள் காலக் கல்வெட்டுகள் மொத்தம் 50 உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை-கும்பகோணம் இரயில் பாதையில் நரசிங்கன் பேட்டை நிலையத்திலிருந்து வடக்கே 2கீ.மீ. தூரத்தில் உள்ளது. காவிரி வடகரை வழியாக மயிலாடுதுறை-கும்பகோணம் பஸ் பாதையில் இத்தலம் உள்ளது.
|