|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருஎறும்பியூர் (திருவெறும்பூர்)
இறைவர் திருப்பெயர் : பிப்பிலிகேஸ்வரர் (பிப்பிலி - எறும்பு), எறும்பீஸ்வரர், எறும்பீசர், மதுவனேஸ்வரர்,
மணிகூடாசலபதி, மாணிக்கநாகர்
இறைவியார் திருப்பெயர் : சௌந்தரநாயகி, மதுவனேஸ்வரி, நறுங்குழல் நாயகி (சுகந்த குழலேஸ்வரி), இரத்தினாம்பாள்.
தல மரம் : வில்வம்.
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
வழிபட்டோர் : திருமால், பிரமன், நைமிசாரண்ய ரிஷிகள், இந்திரன், தேவர்கள்.
தேவாரப் பாடல்கள் : அப்பர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- இக்கோயில் மலைமீது உள்ளது. மலைக்கோயில் புராணப்படி இதற்கு; பிப்பிலீச்சரம், மணிக்கூடம், இரத்தினக்கூடம், திருவெறும்பிபுரம், எறும்பீசம், பிரமபுரம், இலக்குமிபுரம்,
மதுவனபுரம் குமாரபுரம் எனப் பல பெயர்களுண்டு. தென் கயிலாயம் என்றும் இத்தலத்தைச் சொல்வர்.
- கல்வெட்டில் இறைவனின் திருப்பெயர், 'திருமலையாழ்வார் ' என்றும், 'திருவெறும்பியூர் உடைய நாயனார் ' என்றும் குறிக்கப்பெற்றுள்ளது.
- நவக்கிரக சந்நிதியில் சூரியம் திருவுருவம் இருமனைவியரோடும் நடுவில் உள்ளது.
- கருவறை கல்லாலான கட்டிடம்.
- மூலலிங்கம் மண்புற்றாக மாறியிருப்பதால், நீர்படாமல் பாதுகாக்கப்படுகிறது. சிவலிங்கத்திருமேனி வடபால் சாய்ந்துள்ளது. மேற்புறம் சொரசொரப்பாக (தலபுராணம்
தொடர்புடையது) உள்ளது. சிவலிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்கள் உள்ளன.
- கருவறையின் வெளிப்புறம் கல்வெட்டுக்கள் உள்ளன.
- கல்வெட்டில் இத்தலம் "ஸ்ரீ கண்டசதுர்வேதி மங்கலம்" என்று குறிக்கப்படுகிறது.
- எறும்பியூர் தலபுராணம் உள்ளது.
- (கி. பி. 1752-ல் ஆங்கிலேயாக்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் நடந்த போரின்போது இவ்விடம் போர் வீரர்கள் தங்கும் ராணுவத் தளமாக விளங்கியது.)
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருச்சியை அடுத்த இருப்புப் பாதை நிலையம், திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ளது. திருச்சியிலிருந்து அடிக்கடி நகரப்பேருந்துகள் உள்ளன.
|