திருச் சாய்க்காடு(சாயாவனம்)

இறைவர் திருப்பெயர்	: சாயாவனேஸ்வரர், அமுதேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: குயிலினும் நன்மொழியம்மை
தல மரம்		: பைஞ்சாய் (சாய்-கோரை)
தீர்த்தம்			: காவிரி, ஐராவத தீர்த்தம்
வழிபட்டோர்		: உபமன்யு முனிவர், இந்திரன், ஐராவதம், இந்திரனின் தாயார், ஆதிசேடன்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர்( 1. நித்தலுந்நியமஞ்செய்துநீர், 2.மண்புகார் வான்புகார்),
அப்பர்(தோடுலா மலர்கள் தூவி, 2.வானத் திளமதியும்பாம்புந்),
ஐயடிகள் காடவர்கோன்(அஞ்சனஞ்சேர் கண்ணார்)
thirucaykkadu temple                                        

தல வரலாறு

  • பைஞ்சாய் எனும் கோரைப்புற் காடாக இருந்ததால், இப் பெயர்.
  • ஆதி சேடனது நாகமணி ஒளி வீசியதாலும் (இதனை சாய் - ஒளி என்பர்.) இப் பெயர் பெற்றது.
  • இயற்பகை நாயனார் வழிபட்ட தலம்.
  • இந்திரன் தாயார் தினமும் இத் தலத்தைப் பூஜித்து வந்தனர். அவரது துயர் நீக்க, இந்திரன் இத்திருமேனியைத் தேவலோகம் கொண்டுபோக எண்ணித் தோண்டி, அது, பாதாளம் வரை சென்றிருந்தமையால், அவரை மீண்டும் அங்கேயே எழுந்தருளச் செய்தான். அவ்வடு இன்றும் உள்ளது.

சிறப்புக்கள்

  • காசிக்குச் சமமான சிறப்புள்ள ஆறு தலங்களுள் ஒன்று. மற்றவை 1.திருவெண்காடு, 2.மயிலாடுதுறை,
    3.திருவிடைமருதூர், 4.திருவையாறு 5.திருவாஞ்சியம் .
  • சோழர் கால கல்வெட்டுகள் பத்தும், பாண்டியரது மூன்றும் ஆக பதிமூன்று கல்வெட்டுகள் உள்ளன.
  • கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு இது, சீர்காழிக்குத் தென் கிழக்கே12கீ.மீ. தூரத்தில் உள்ளது. சீர்காழி,மயிலாடுதுறை ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.

< PREV <
காவிரி வடகரை 8வது தலம்
திருக்கலிக்காமூர்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 10வது தலம்
திருப்பல்லவனீசுரம்